பொது செய்தி

தமிழ்நாடு

தொடர் மழை எதிரொலி: கதிரடிப்பு, தானிய சேமிப்பில் சிக்கல்

Added : ஜூலை 28, 2021
Share
Advertisement
ஆர்.கே.பேட்டை: தொடர் மழையால், நெல் வயலில் அறுவடை, அறுவடைக்கு பிந்தைய கதிரடிப்பு மற்றும் தானிய சேமிப்பு உள்ளிட்டவை பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், விவசாயிகள் தவித்து வருகின்றனர்.ஆர்.கே.பேட்டை சுற்றுப் பகுதியில், இரண்டு வாரங்களாக, தினசரி கன மழை பெய்து வருகிறது. இதனால், அறுவடைக்கு தயார் நிலையில் உள்ள வயல்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. சிரமத்துடன் அறுவடை

ஆர்.கே.பேட்டை: தொடர் மழையால், நெல் வயலில் அறுவடை, அறுவடைக்கு பிந்தைய கதிரடிப்பு மற்றும் தானிய சேமிப்பு உள்ளிட்டவை பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், விவசாயிகள் தவித்து வருகின்றனர்.
ஆர்.கே.பேட்டை சுற்றுப் பகுதியில், இரண்டு வாரங்களாக, தினசரி கன மழை பெய்து வருகிறது. இதனால், அறுவடைக்கு தயார் நிலையில் உள்ள வயல்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. சிரமத்துடன் அறுவடை செய்யப்படும் தானிய கதிர்களை, வெயிலில் காய வைக்கவும், விவசாயிகள் சிரமப்படுகின்றனர்.
மாலை மற்றும் இரவு நேரத்தில், மழை பெய்வதால், களத்து மேட்டில், தானியங்களை பாதுகாக்க முடிவது இல்லை. அறுவடை செய்யப்பட்ட தானியங்களை, ஒரு சில நாட்கள், வெயிலில் காய வைத்தால் மட்டுமே, அவற்றை நீண்ட நாட்களுக்கு சேமித்து வைக்க முடியும். தொடர் மழை அறுவடை மற்றும் அறுவடைக்கு பிந்தைய பணிகளில் சிக்கலை ஏற்படுத்தி வருவதால், விவசாயிகள், விழிப்புடன் களத்து மேட்டில் செயல்பட்டு வருகின்றனர்.
மழையில் இருந்து தானியங்களை பாதுகாக்க தேவையான சாக்கு பைகள் மற்றும் தார் பாய்களுடன் தயார் நிலையில் உள்ளனர். மழை மேகங்கள் சூழ்ந்ததும், தானியங்களை பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு செல்வதும், மீண்டும் அவற்றை களத்தில் கொட்டி காய வைப்பதும் என பரபரப்பாக இயங்கி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X