'பீக் ஹவர்ஸ்' நேரத்தில்... போக்குவரத்துக்கு இடையூறு: வாகன ஓட்டிகள் கடும் அவதி

Added : ஜூலை 28, 2021
Share
Advertisement
திருப்பூர்:திருப்பூர் குமரன் ரோட்டிலிருந்துடி.எம்.எப்., பாலம் செல்லும் வகையில் கோர்ட் வீதி உள்ளது.ஏராளமான அலுவலகங்கள் வர்த்தக நிறுவனங்கள், திருப்பூர் யூனியன் அலுவலகம், போலீஸ் குடியிருப்பு, வங்கிகள் உள்ளிட்டவை இந்த வீதியில் உள்ளன. குமரன் ரோட்டுக்கு இணையான வாகனப் போக்குவரத்து, நெரிசல், மக்கள் நடமாட்டம் அதிகளவில் உள்ள ரோடாக இந்த ரோடு உள்ளது.இந்த ரோட்டில் மூன்று
 'பீக் ஹவர்ஸ்' நேரத்தில்... போக்குவரத்துக்கு இடையூறு: வாகன ஓட்டிகள் கடும் அவதி

திருப்பூர்:திருப்பூர் குமரன் ரோட்டிலிருந்துடி.எம்.எப்., பாலம் செல்லும் வகையில் கோர்ட் வீதி உள்ளது.ஏராளமான அலுவலகங்கள் வர்த்தக நிறுவனங்கள், திருப்பூர் யூனியன் அலுவலகம், போலீஸ் குடியிருப்பு, வங்கிகள் உள்ளிட்டவை இந்த வீதியில் உள்ளன. குமரன் ரோட்டுக்கு இணையான வாகனப் போக்குவரத்து, நெரிசல், மக்கள் நடமாட்டம் அதிகளவில் உள்ள ரோடாக இந்த ரோடு உள்ளது.இந்த ரோட்டில் மூன்று குறுக்கு ரோடுகள் உள்ளன. இந்த ரோட்டில் கால்வாய் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக கோர்ட் வீதி - ராஜா ராவ் வீதி சந்திப்பு பகுதியில் குழி தோண்டிய மண் கொட்டி வழி மறிக்கப்பட்டு, கட்டுமான பணி நடைபெற்றது.நேற்று முன்தினம் மாலை 5:00 மணியளவில் கோர்ட் வீதி சந்திப்பில் திடீரென வாகனப் போக்குவரத்து தடை செய்து, அங்கு குவித்திருந்த மண் மேட்டை அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டது.போக்குவரத்து போலீசாருக்கும் தகவல் இல்லை. இந்த வழியாகச் செல்ல முடியாமல் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகினர். நீண்ட துாரம் சென்று திரும்ப வேண்டிய நிலை ஏற்பட்டது.மேலும், அந்த ரோட்டில் வாகனங்கள் சென்று திரும்பியதால் பெரும் போக்குவரத்து நெருக்கடியும் ஏற்பட்டது.ராஜாராவ் வீதியில் உள்ள ஆளும் கட்சி அலுவலகத்துக்கு செல்ல இடையூறில்லாமல் மண் மேட்டை அகற்றும் பணி நடைபெற்றது. இதை பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் சிரமம் ஏற்படுத்தாமல் இரவு நேரத்தில் மேற்கொண்டிருக்கலாம் என பொதுமக்கள் அதிருப்தி தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X