பொது செய்தி

தமிழ்நாடு

ஏற்றுமதி வர்த்தகம் மும்மடங்கு உயர்த்தலாம்: ஏ.இ.பி.சி., தலைவர் நம்பிக்கை

Added : ஜூலை 28, 2021
Share
Advertisement
திருப்பூர்:ஏற்றுமதி வர்த்தகத்தை, மூன்று மடங்கு உயர்த்த, தமிழக அரசு உறுதுணையாக இருக்க வேண்டுமென, ஏ.இ.பி.சி.,தலைவர் சக்திவேல் வேண்டுகோள் விடுத்துள்ளார்.தமிழக முதல்வர் ஸ்டாலினை சந்தித்த அவர், அளித்த கடிதம்:தமிழகத்துக்கு தனி ஏற்றுமதி கொள்கை உருவாக்கப்பட வேண்டும். ஏற்றுமதி அபிவிருத்தி கழகம் என்ற தனி அமைப்பையும், உதிரி பாகங்கள் உற்பத்தி பூங்காவையும் அமைக்க வேண்டும்.
 ஏற்றுமதி வர்த்தகம் மும்மடங்கு உயர்த்தலாம்: ஏ.இ.பி.சி., தலைவர் நம்பிக்கை

திருப்பூர்:ஏற்றுமதி வர்த்தகத்தை, மூன்று மடங்கு உயர்த்த, தமிழக அரசு உறுதுணையாக இருக்க வேண்டுமென, ஏ.இ.பி.சி.,தலைவர் சக்திவேல் வேண்டுகோள் விடுத்துள்ளார்.தமிழக முதல்வர் ஸ்டாலினை சந்தித்த அவர், அளித்த கடிதம்:தமிழகத்துக்கு தனி ஏற்றுமதி கொள்கை உருவாக்கப்பட வேண்டும். ஏற்றுமதி அபிவிருத்தி கழகம் என்ற தனி அமைப்பையும், உதிரி பாகங்கள் உற்பத்தி பூங்காவையும் அமைக்க வேண்டும். தையல் மற்றும் கனரக ஜவுளி இயந்திர பூங்கா, மருத்துவ தொழில்நுட்ப பூங்கா, செயற்கை நுாலிழை ஆடை உற்பத்தி பூங்கா அமைக்க வேண்டும்.மதுரை, துாத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் இத்தகைய பூங்காக்களை அமைக்க வேண்டும். மத்திய அரசு முதலீட்டு ஜவுளி பூங்கா (மித்ரா) அமைத்தால், சர்வதேச சந்தை போட்டிகளை சமாளிக்கவும், அதிக முதலீடுகளை ஈர்க்கவும், வேலை வாய்ப்பை அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது.துறைமுகங்களில், மேம்பட்ட கட்டமைப்புகளை உருவாக்குவதுடன், கோவை விமான நிலையத்துக்கு, சர்வதேச விமானங்கள் வந்து செல்லும் வசதியை ஏற்படுத்த வேண்டும். திருப்பூர் நகரில், மெட்ரோ ரயில் திட்டத்தையும், இ.எஸ்.ஐ., மருத்துவமனை பணிகளையும் விரைவாகவும் அமைக்க வேண்டும்.தொழிலாளர்களுக்கு, நிறுவனங்களுக்கு அருகி லேயே குடியிருப்பு வசதியை அமைத்து கொடுக்க வேண்டும். ஆண்கள், பெண்கள் என, தனித்தனி தங்கும் விடுதிகள் அமைத்தால், வெளிமாநில தொழிலாளர் பாதுகாப்பாக தங்கியிருக்க முடியும்.மாநிலத்தின் தொழில் வளர்ச்சி மற்றும் ஏற்றுமதி வர்த்தக வளர்ச்சிக்கு, தமிழக அரசுடன் தொழில்துறையினர் துணை நிற்போம் என, முதல்வரிடம் உறுதி அளித்துள்ளோம்.இவ்வாறு, அதில் அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X