காதல் திருமண கலாட்டா கத்திக்குத்து; கரன்ட் ஷாக்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

காதல் திருமண கலாட்டா கத்திக்குத்து; 'கரன்ட் ஷாக்'

Added : ஜூலை 28, 2021
Share
குடியாத்தம்:மனைவியை பார்க்க மறுப்பு தெரிவித்ததால், மனைவியின் தாய், தந்தை, சகோதரியை கத்தியால் குத்தியவர், மின்சாரம் தாக்கி படுகாயமடைந்தார்.வேலுார் மாவட்டம், குடியாத்தத்தைச் சேர்ந்தவர் சந்திரசேகர், 60; ஓட்டல் நடத்தி வருகிறார். இவரது மனைவி சசிகலா, 48. மகள்கள் மல்லிகா, 26; ஜமுனா, 22. மல்லிகா திருமணமாகி, குடியாத்தத்தில் வசிக்கிறார்.அதே பகுதியைச் சேர்ந்தவர் முகேஷ், 27. வேலுாரில்

குடியாத்தம்:மனைவியை பார்க்க மறுப்பு தெரிவித்ததால், மனைவியின் தாய், தந்தை, சகோதரியை கத்தியால் குத்தியவர், மின்சாரம் தாக்கி படுகாயமடைந்தார்.

வேலுார் மாவட்டம், குடியாத்தத்தைச் சேர்ந்தவர் சந்திரசேகர், 60; ஓட்டல் நடத்தி வருகிறார். இவரது மனைவி சசிகலா, 48. மகள்கள் மல்லிகா, 26; ஜமுனா, 22. மல்லிகா திருமணமாகி, குடியாத்தத்தில் வசிக்கிறார்.அதே பகுதியைச் சேர்ந்தவர் முகேஷ், 27. வேலுாரில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார். முகேஷ், ஜமுனா காதலித்து வந்தனர். ஜமுனா பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால், கடந்த மாதம் வேலுாரில் உள்ள ஒரு கோவிலில் திருமணம் செய்து கொண்டனர்.

இதையறிந்த சந்திரசேகர், ஜமுனாவுக்கு போன் செய்து, தாய்க்கு உடல்நிலை சரியில்லை என ஏமாற்றி, தன் வீட்டுக்கு வரவழைத்து விட்டார். ஜமுனாவுக்கு வேறு இடத்தில் திருமணம் செய்ய ஏற்பாடு நடந்தது.இதையறிந்த முகேஷ் ஜமுனாவை பார்க்க சென்றார். இதை பார்த்த சந்திரசேகர் சத்தம் போட்டார். ஆத்திரமடைந்த முகேஷ் கத்தியால் சந்திரசேகர், சசிகலா, மல்லிகா ஆகியோரை குத்தினார்.

தப்பியோடும் எண்ணத்தில், மாடியில் இருந்து முகேஷ் கீழே குதித்தார். அப்போது மின் கம்பியில் பட்டு காயமடைந்தார். சந்திரசேகர், சசிகலா, மல்லிகா சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையிலும், வேலுார் தனியார் மருத்துவமனையில் முகேஷும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.குடியாத்தம் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X