பொது செய்தி

தமிழ்நாடு

டி.கே.மார்க்கெட் தரைக்கடை ஏலம் ரத்து; கமிஷனர் அறிவிப்பு

Added : ஜூலை 28, 2021
Share
Advertisement
கோவை:கோவை டி.கே.மார்க்கெட் வளாகத்தில் புதிதாக கட்டியுள்ள, 89 கடைகளுக்கான ஏலத்தை, மாநகராட்சி நேற்று ரத்து செய்தது.தியாகி குமரன் மார்க்கெட் வளாகத்துக்கு அருகில், போக்குவரத்துக்கு இடையூறாக ரோட்டில் இருந்த தரைக்கடைகள், கடந்தாண்டு மாநகராட்சியால் அகற்றப்பட்டன. அவ்வியாபாரிகளுக்கு மாற்று இடமாக, வாகன நிறுத்துமிடத்தில், கடை ஒதுக்க, உறுதி அளிக்கப்பட்டது.அங்கு, புதிதாக

கோவை:கோவை டி.கே.மார்க்கெட் வளாகத்தில் புதிதாக கட்டியுள்ள, 89 கடைகளுக்கான ஏலத்தை, மாநகராட்சி நேற்று ரத்து செய்தது.தியாகி குமரன் மார்க்கெட் வளாகத்துக்கு அருகில், போக்குவரத்துக்கு இடையூறாக ரோட்டில் இருந்த தரைக்கடைகள், கடந்தாண்டு மாநகராட்சியால் அகற்றப்பட்டன. அவ்வியாபாரிகளுக்கு மாற்று இடமாக, வாகன நிறுத்துமிடத்தில், கடை ஒதுக்க, உறுதி அளிக்கப்பட்டது.அங்கு, புதிதாக கட்டப்பட்ட, 89 கடைகளும், ஏல நிபந்தனைகளின் படி ஒதுக்கப்படும் என, மாநகராட்சி அறிவித்தது. அதற்கான ஏலம் நேற்று நடைபெறுவதாக இருந்தது; 51 கடைகளுக்கு, 75 பேர் ஏலம் கோரியிருந்தனர்.இதற்கிடையே, பழைய வியாபாரிகள் தங்களுக்கே கடை ஒதுக்க முன்னுரிமை அளிக்க வேண்டுமென, சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். அதில், வியாபாரிகளின் கோரிக்கையை பரிசீலனைக்கு, எடுத்துக் கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. அதனால், நேற்று நடைபெற இருந்த ஏலம் ரத்து செய்யப்படுவதாக, மாநகராட்சி கமிஷனர் ராஜகோபால் அறிவித்துள்ளார்.அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'ஐகோர்ட் பிறப்பித்துள்ள உத்தரவை பின்பற்ற வேண்டியிருப்பதாலும், ஏல நடைமுறையில் மாற்றம் செய்ய வேண்டியுள்ளதாலும், ஏலம் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஏலம் தொடர்பான மறு அறிவிப்பு, பொதுமக்கள் அறியும் வண்ணம் பின்னர் வெளியிடப்படும். ஏலத்தில் பங்கேற்க விண்ணப்பித்தவர்கள், தாங்கள் செலுத்திய தொகையை திரும்ப பெற்றுக் கொள்ளலாம்' என தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X