கோர்ட் செய்தி

தமிழ்நாடு

ஆக்கிரமிப்பு அகற்றத்தில் அலட்சியம் அதிகாரிகளுக்கு ஐகோர்ட் எச்சரிக்கை

Added : ஜூலை 28, 2021
Share
Advertisement
மதுரை:'ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரும் மனுக்கள் மீது நடவடிக்கை இல்லாவிடில், அதிகாரிகளும் ஆக்கிரமிப்பிற்கு உடந்தை என கருத வேண்டிய நிலை ஏற்படும்' என, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை எச்சரித்துள்ளது. திண்டுக்கல் மாவட்டம், நத்தம் வீரப்பநாயக்கன் பட்டியை சேர்ந்த லட்சுமிபதிராஜ் தாக்கல் செய்த மனு:வீரப்பநாயக்கன் பட்டியில் லட்சுமணநாயக்கர் குளம் கண்மாய் உள்ளது. இதன்

மதுரை:'ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரும் மனுக்கள் மீது நடவடிக்கை இல்லாவிடில், அதிகாரிகளும் ஆக்கிரமிப்பிற்கு உடந்தை என கருத வேண்டிய நிலை ஏற்படும்' என, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை எச்சரித்துள்ளது.

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் வீரப்பநாயக்கன் பட்டியை சேர்ந்த லட்சுமிபதிராஜ் தாக்கல் செய்த மனு:வீரப்பநாயக்கன் பட்டியில் லட்சுமணநாயக்கர் குளம் கண்மாய் உள்ளது. இதன் நீர்ப்பிடிப்பு பகுதியை சிலர் சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ளனர். இதனால் மழைக் காலத்தில் தண்ணீர் வீடுகளுக்குள் புகுந்து விடுகிறது.கண்மாயில் சாலை அமைக்கின்றனர். இதனால் தண்ணீர் வரத்து தடைபடும். பதிலாக கண்மாய் கரையில் சாலை அமைக்கலாம்.

ஆக்கிரமிப்புகள் மற்றும் சாலை அமைத்துள்ளதை அகற்றக் கோரி, திண்டுக்கல் கலெக்டருக்கு மனு அனுப்பினேன். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு, குறிப்பிட்டார்.

நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், எஸ்.ஆனந்தி உத்தரவு:ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி, சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மக்கள் மனு அளிக்கின்றனர். அதன் மீது நடவடிக்கை இன்றி ஆக்கிரமிப்பாளர்களை கண்டுகொள்ளாமல் இருந்தால், சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் ஆக்கிரமிப்பிற்கு உடந்தையானவர்களாக இந்நீதிமன்றம் கருத வேண்டிய நிலை ஏற்படும்.

நத்தம் தாசில்தார் மனுவை பரிசீலிக்க வேண்டும். சம்பந்தப்பட்டோருக்கு நோட்டீஸ் அளித்து, விளக்கம் பெற வேண்டும். ஆக்கிரமிப்பு உறுதியாகும் பட்சத்தில், சட்டத்திற்கு உட்பட்டு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு உத்தரவிட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X