எடியூரப்பா விவகாரத்தில் காங்., மனநிலை: குமாரசாமி விமர்சனம்

Added : ஜூலை 28, 2021
Share
Advertisement
ராம்நகர்: ''ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தின் லாபத்தை பெறுவதற்காக, எடியூரப்பா குறித்து காங்கிரசார் மிருதுவாக பேசுகின்றனர்,'' என, ம.ஜ.த.,வை சேர்ந்த முன்னாள் முதல்வர் குமாரசாமி தெரிவித்தார்.காங்கிரஸ் தலைவர்கள் திடீரென, காபந்து முதல்வர் எடியூரப்பா மீது கூடுதல் அக்கறை செலுத்தி, அவர் புகழ் பாடுகின்றனர். இது குறித்து, ம.ஜ.த.,வைச் சேர்ந்த முன்னாள் முதல்வர் குமாரசாமி,

ராம்நகர்: ''ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தின் லாபத்தை பெறுவதற்காக, எடியூரப்பா குறித்து காங்கிரசார் மிருதுவாக பேசுகின்றனர்,'' என, ம.ஜ.த.,வை சேர்ந்த முன்னாள் முதல்வர் குமாரசாமி தெரிவித்தார்.
காங்கிரஸ் தலைவர்கள் திடீரென, காபந்து முதல்வர் எடியூரப்பா மீது கூடுதல் அக்கறை செலுத்தி, அவர் புகழ் பாடுகின்றனர். இது குறித்து, ம.ஜ.த.,வைச் சேர்ந்த முன்னாள் முதல்வர் குமாரசாமி, ராம்நகரில் கூறியதாவது:
முதல்வர் பதவிக்கு இப்போதே, காங்கிரஸ் தலைவர் ஒருவர், 'துண்டு' போட்டுள்ளார். அவர், எடியூரப்பாவை ஊழல்வாதி என்றும், அடுத்த முதல்வரும் ஊழல்வாதியாகவே இருப்பார் என்றும் கூறுகிறார். ஆனால், ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தின் லாபத்தை பெறுவதற்காக, எடியூரப்பா குறித்து, காங்கிரசார் மிருதுவாக பேசுகின்றனர்.
முதல்வர் தேர்வு செய்வது என்பது, பா.ஜ.,வின் உட்கட்சி விவகாரம். அதனால் லாபமடையும் நோக்கம் ம.ஜ.த.,வுக்கு இல்லை. நான் இரண்டு முறை அதிர்ஷ்டவசமாக முதல்வரானேன். அடுத்த முறையும் சாமுண்டீஸ்வரி தாய், எனக்கு அதிகாரம் வழங்குவார் என்ற நம்பிக்கை உள்ளது. அப்போது, ம.ஜ.த., கதை முடிந்து விட்டது என்று கூறியவர்களுக்கு பதில் கிடைக்கும். இவ்வாறு குமாரசாமி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X