சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தப்பியது 3 பவுன் நகை பறித்த இருவர் சிக்கினர்

Added : ஜூலை 28, 2021
Share
Advertisement
போத்தனூர்:சுந்தராபுரம் அடுத்த சீனிவாசா நகரை சேர்ந்தவர் சிவமணிகண்டன்; மனைவி சுமித்ரா,35. நேற்று முன்தினம் இரவு, தனது வீட்டிற்கு செல்லும் மெயின் ரோட்டில் நடந்து சென்றார்.அவரை பின் தொடர்ந்து மொபட்டில் வந்த இருவர், அவரது கழுத்திலிருந்த மூன்று பவுன் தங்க நகையை, பறிக்க முயன்றனர். சுமித்ரா சத்தம் போட்டதும், இருவரும் தப்பினர்.அங்கிருந்தோர் வாகனங்களில் இருவரையும் துரத்திச்

போத்தனூர்:சுந்தராபுரம் அடுத்த சீனிவாசா நகரை சேர்ந்தவர் சிவமணிகண்டன்; மனைவி சுமித்ரா,35. நேற்று முன்தினம் இரவு, தனது வீட்டிற்கு செல்லும் மெயின் ரோட்டில் நடந்து சென்றார்.அவரை பின் தொடர்ந்து மொபட்டில் வந்த இருவர், அவரது கழுத்திலிருந்த மூன்று பவுன் தங்க நகையை, பறிக்க முயன்றனர். சுமித்ரா சத்தம் போட்டதும், இருவரும் தப்பினர்.அங்கிருந்தோர் வாகனங்களில் இருவரையும் துரத்திச் சென்றனர். காமராஜ் நகர் அருகே ஒருவர் சிக்கினார். 'பொதுமாத்து' கொடுத்து விசாரித்தனர். குனியமுத்தூர், இடையர்பாளையம் ரோடு, மதுரை வீரன் கோவில் வீதியை சேர்ந்த, 18 வயது சிறுவன் என தெரிந்தது. தப்பிய, 18 வயது சிறுவனும் வரவழைக்கப்பட்டார்.போத்தனூர் போலீஸ் ஏட்டு ஜெயபாலிடம் இருவரும் ஒப்படைக்கப்பட்டனர். போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் செல்லப்பட்ட இருவரிடமும், விசாரணை நடக்கிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X