சம்பவம் செய்தி

தமிழ்நாடு

காட்டு யானை தாக்கி முதியவர் உயிரிழப்பு

Added : ஜூலை 28, 2021
Share
Advertisement
தொண்டாமுத்தூர்:கோவைப்புதூர், அறிவொளி நகரை சேர்ந்தவர் முத்துசாமி, 63. இவர், மதுக்கரை வனச்சரகத்துக்கு உட்பட்ட, தீத்திபாளையம், மலையடிவாரத்திலுள்ள தனியார் குடியிருப்பு வளாகத்தில், காவலாளியாக பணிபுரிந்து வருகிறார்.நேற்று முன்தினம், இரவு பணியில் இருந்துள்ளார். நேற்று அதிகாலை, சிறுநீர் கழிக்க வெளியில் வந்துள்ளார். அப்போது, அங்கு வந்த காட்டு யானை, முத்துச்சாமியை தாக்கியது.

தொண்டாமுத்தூர்:கோவைப்புதூர், அறிவொளி நகரை சேர்ந்தவர் முத்துசாமி, 63. இவர், மதுக்கரை வனச்சரகத்துக்கு உட்பட்ட, தீத்திபாளையம், மலையடிவாரத்திலுள்ள தனியார் குடியிருப்பு வளாகத்தில், காவலாளியாக பணிபுரிந்து வருகிறார்.நேற்று முன்தினம், இரவு பணியில் இருந்துள்ளார். நேற்று அதிகாலை, சிறுநீர் கழிக்க வெளியில் வந்துள்ளார். அப்போது, அங்கு வந்த காட்டு யானை, முத்துச்சாமியை தாக்கியது. இதில், முத்துச்சாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். முத்துசாமிக்கு மாற்று காவலாளியான வீரபத்திரன், காலையில் பணிக்கு வந்த போது, காட்டு யானை தாக்கி முத்துச்சாமி உயிரிழந்தது தெரியவந்தது. சம்பவ இடத்தில் மதுக்கரை வனத்துறையினர் மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர். பேரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X