சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சில வரி செய்திகள்...: மாவட்டம்

Added : ஜூலை 28, 2021
Share
Advertisement
ஏரியில் மூழ்கி சிறுவன், சிறுமி பலிஅரக்கோணம்: ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அடுத்த பெருங்களத்துாரைச் சேர்ந்த சிறுமி சத்யா, 10; இவரது தம்பி கிஷோர், 9. அதே பகுதியைச் சேர்ந்த மற்றொரு சிறுமி ஆனந்தி, 10.மூவரும் நேற்று முன்தினம் மாலை 5:00 மணிக்கு, அங்குள்ள ஏரியில் மீன் பிடிக்க சென்றனர். மூவரும் நீரில் மூழ்கினர். அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு, திருத்தணி அரசு மருத்துவமனையில்
 சில வரி செய்திகள்...: மாவட்டம்

ஏரியில் மூழ்கி சிறுவன், சிறுமி பலி

அரக்கோணம்: ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அடுத்த பெருங்களத்துாரைச் சேர்ந்த சிறுமி சத்யா, 10; இவரது தம்பி கிஷோர், 9. அதே பகுதியைச் சேர்ந்த மற்றொரு சிறுமி ஆனந்தி, 10.மூவரும் நேற்று முன்தினம் மாலை 5:00 மணிக்கு, அங்குள்ள ஏரியில் மீன் பிடிக்க சென்றனர். மூவரும் நீரில் மூழ்கினர். அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு, திருத்தணி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். நேற்று அதிகாலை கிஷோர், ஆனந்தி இறந்தனர்.

வெளிமாநில மது பாட்டில்கள் அழிப்பு

ஓமலுார்: தமிழகத்தில் ஊரடங்கால், 'டாஸ்மாக்' கடைகள் மூடப்பட்டபோது, கர்நாடகா, புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து, பலர் மதுபானம் வாங்கி வந்தனர். சேலம், இரும்பாலை, மேட்டூர் மதுவிலக்கு போலீசார், 2,500க்கும் மேற்பட்ட வெளிமாநில மது பாட்டில்களை கைப்பற்றினர். அந்த பாட்டில்களை நேற்று, மதுவிலக்கு டி.எஸ்.பி., ராஜேந்திரன் முன் தரையில் போட்டு, அதன் மீது வாகனத்தை ஏற்றி அழித்தனர்.

ஊராட்சிக்கு மத நல்லிணக்க விருது
புதுக்கோட்டை: மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக திகழும் ஊராட்சிக்கு, மத்திய அரசு, ஒவ்வொரு ஆண்டும், விருது மற்றும் 10 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கி வருகிறது. இந்த ஆண்டு, புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே, அம்புக்கோவில் ஊராட்சி, மத நல்லிணக்க ஊராட்சிக்கான விருது பெற்றுள்ளது.அம்புக்கோவில் ஊராட்சி தலைவர் சுமன் மற்றும் வார்டு உறுப்பினர்களுக்கு, கலெக்டர் கவிதாராமு நேற்று வாழ்த்து தெரிவித்து, விருது மற்றும் 10 லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்.

குழந்தை திருமணம்: மூவர் கைது

ஊட்டி: நீலகிரி மாவட்டத்தில் இரு நாட்களில் ஊட்டி புதுமந்து, வால்சம் ரோடு, எல்க்ஹில் ஆகிய பகுதிகளில் குழந்தை திருமணங்கள் நடப்பது குறித்து, ஊட்டி சைல்டு லைனுக்கு புகார் தெரிவிக்கப்பட்டது.தொடர்ந்து, அனைத்து மகளிர் போலீசார் உதவியுடன், சம்பந்தப்பட்ட பகுதியில் ஆய்வு நடத்தி குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டன. மூன்று வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். உடந்தையாக இருந்த பெற்றோர் மீதும், 'போக்சோ' வழக்கு பதிந்து, விசாரணை நடக்கிறது.

தொழிலாளியை கொன்ற நண்பர் கைது

ஓசூர்: ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் திகம்பர் பேக், 39; ஓசூர் அடுத்த பைரமங்கலத்தில் தங்கி, அங்குள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். அவருடன், உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ராஜ்பகதுார் சிங், 49 தங்கியிருந்தார். உணவு சமைப்பது தொடர்பாக, அவர்களுக்குள் தகராறு இருந்தது. கடந்த 25ம் தேதி இரவு, போதையில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த ராஜ்பகதுார் சிங், இரும்பு கம்பியால் திகம்பர் பேக்கை தாக்கியதில் பலியானார். ராஜ்பகதுார் சிங்கை, கெலமங்கலம் போலீசார் கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X