ஆக., 3ல் ஜனாதிபதி ஊட்டி வருகை | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஆக., 3ல் ஜனாதிபதி ஊட்டி வருகை

Added : ஜூலை 28, 2021
Share
ஊட்டி:ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஆகஸ்ட் 3ம் தேதி ஊட்டி வருகையை முன்னிட்டு, பாதுகாப்பு ஏற்பாடுகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. நீலகிரி மாவட்டம், குன்னுார் வெலிங்டன் ராணுவ கல்லுாரியில் நடக்க உள்ள நிகழ்ச்சியில், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பங்கேற்க உள்ளார். இதற்காக, ஆக., 3ல், கோவையில் இருந்து ஹெலிகாப்டரில் ஊட்டி வரும் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், ராஜ்பவனில்
 ஆக., 3ல் ஜனாதிபதி  ஊட்டி வருகை

ஊட்டி:ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஆகஸ்ட் 3ம் தேதி ஊட்டி வருகையை முன்னிட்டு, பாதுகாப்பு ஏற்பாடுகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன.

நீலகிரி மாவட்டம், குன்னுார் வெலிங்டன் ராணுவ கல்லுாரியில் நடக்க உள்ள நிகழ்ச்சியில், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பங்கேற்க உள்ளார். இதற்காக, ஆக., 3ல், கோவையில் இருந்து ஹெலிகாப்டரில் ஊட்டி வரும் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், ராஜ்பவனில் தங்குகிறார். வரும், 4ம் தேதி குன்னுார் வெலிங்டன் ராணுவ கல்லுாரியில் நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.

5ம் தேதி ஊட்டியில் உள்ள சுற்றுலா தலங்களை பார்வையிட உள்ளார். இதற்காக, மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்கள் பொலிவு படுத்தப்பட்டு வருகின்றன. ஊட்டி தீட்டுகல்லில் உள்ள ஹெலிகாப்டர் தளம் மற்றும் ராஜ்பவன் மாளிகை ஆகியவை சீரமைக்கப்பட்டு வருகின்றன.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X