சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கணவன் கழுத்தை அறுத்து கொல்ல முயற்சி; மனைவி, ஆறு பேர் கைது

Added : ஜூலை 28, 2021
Share
Advertisement
கோவை:கோவையில், கணவன் கழுத்தை அறுத்து கொல்ல முயன்ற மனைவி உட்பட, ஆறு பேர் கைது செய்யப்பட்டனர்.ஒண்டிப்புதுார், நெசவாளர் காலனியை சேர்ந்தவர் சேதுராஜாராம்சிங்,29. ஆன்லைன் வர்த்தகம் செய்து வருகிறார். இவரது மனைவி சவுந்தர்யா,25, சிங்காநல்லுார் இ.எஸ்.ஐ., மருத்துவமனையில் சுகாதார பணியாளராக பணியாற்றி வருகிறார்.கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன், காதல் திருமணம் செய்த இவர்களுக்கு, இரண்டு

கோவை:கோவையில், கணவன் கழுத்தை அறுத்து கொல்ல முயன்ற மனைவி உட்பட, ஆறு பேர் கைது செய்யப்பட்டனர்.ஒண்டிப்புதுார், நெசவாளர் காலனியை சேர்ந்தவர் சேதுராஜாராம்சிங்,29. ஆன்லைன் வர்த்தகம் செய்து வருகிறார். இவரது மனைவி சவுந்தர்யா,25, சிங்காநல்லுார் இ.எஸ்.ஐ., மருத்துவமனையில் சுகாதார பணியாளராக பணியாற்றி வருகிறார்.கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன், காதல் திருமணம் செய்த இவர்களுக்கு, இரண்டு குழந்தைகள் உள்ளனர். சேதுராஜாராம் சிங் குடித்து விட்டு, அடிக்கடி மனைவியிடம் தகராறு செய்தார்.இந்நிலையில், நீலிகோணாம்பாளையத்தை சேர்ந்த ஆம்புலன்ஸ் டிரைவர் குணசேகரனுக்கும்,25, சவுந்தர்யாவுக்கும் தொடர்பு ஏற்பட்டது. சேதுராஜராம்சிங் கண்டித்தும் கேட்காததால், அவர்களுக்கிடையே அடிக்கடி பிரச்னை ஏற்பட்டது.இதனால் சவுந்தர்யா கோபித்து கொண்டு, தாய் வீட்டிற்கு சென்றார். குடும்பம் நடத்த வருமாறு தொடர்ந்து வற்புறுத்தியதால், சேதுராஜாராம் சிங்கை கொலை செய்ய சவுந்தர்யா திட்டமிட்டார்.சவுந்தர்யா, குணசேகரன் மற்றும் நான்கு சிறுவர்கள் சேர்ந்து, நேற்று முன்தினம் வீட்டில் துாங்கி கொண்டிருந்த சேதுராஜாராம் சிங்கை, சரமாரியாக கத்தியால் குத்தி, கழுத்தை அறுத்தனர். அலறல் சத்தம் கேட்டு, அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர்.அதற்குள் மற்ற ஐந்து பேரும் தப்பி ஓடினர். சவுந்தர்யா முன்னுக்குப் பின் முரணாக பேசினார். படுகாயமடைந்த சேதுராஜாராம் சிங்கை மீட்டு, அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.சிங்கநல்லுார் போலீசார் விசாரித்து, மனைவி சவுந்தர்யா உட்பட ஆறு பேரை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X