பொது செய்தி

தமிழ்நாடு

நெல் மணிகளால் அப்துல்கலாம் ஓவியம் :கல்லூரி மாணவர் அசத்தல்

Added : ஜூலை 28, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
பெரம்பலுார் : பெரம்பலுார் அருகே, கல்லுாரி மாணவர் ஒருவர், முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் நினைவு நாளையொட்டி, அவரது உருவத்தை, 300 கிலோ நெல் மணிகளால், ஓவியமாக வரைந்தார். முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் நினைவு நாள், நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, பெரம்பலுார் மாவட்டம், வாலிகண்டபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன் மகன் நரசிம்மன்,21.கோயம்புத்துாரில் உள்ள தனியார்
நெல் மணிகள் அப்துல்கலாம் ஓவியம்  கல்லூரி மாணவர் அசத்தல்


பெரம்பலுார் : பெரம்பலுார் அருகே, கல்லுாரி மாணவர் ஒருவர், முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் நினைவு நாளையொட்டி, அவரது உருவத்தை, 300 கிலோ நெல் மணிகளால், ஓவியமாக வரைந்தார்.

முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் நினைவு நாள், நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, பெரம்பலுார் மாவட்டம், வாலிகண்டபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன் மகன் நரசிம்மன்,21.

கோயம்புத்துாரில் உள்ள தனியார் கல்லுாரியில் ஆர்க்கிடெக் பயின்று வரும் இவர், இளம் வயது முதல் ஆர்வம் காரணமாக பல்வேறு ஓவியங்களை வரைந்துள்ளார்.

இந்நிலையில், முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் நினைவு நாளை முன்னிட்டு, வாலிகண்டபுரம் கிராமத்தில், தலா 30 அடி நீளம், அகலம் கொண்ட பிரமாண்ட துணியில், 300 கிலோ நெல் மணிகளால், அப்துல் கலாமின் ஓவியத்தை கலை நயத்துடன், இரண்டரை மணி நேரத்தில் வரைந்துள்ளார்.

கல்லுாரி மாணவரின் இந்த ஓவியத்தை, வாலிகண்டபுரம் உள்ளிட்ட சுற்று வட்டார கிராம மக்கள் ஆர்வத்துடன் பார்த்து, பாராட்டினர். மேலும், இந்த முயற்சி, கலாம் புக் ஆப் ரெக்கார்டு புத்தகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mohan - Thanjavur ,இந்தியா
28-ஜூலை-202123:03:01 IST Report Abuse
Mohan பொழைக்க தெரியாத மாணவன். CM படம் காட்டிருந்தா அரசு பணி ஆணை கிடைத்திருக்கும். இன்னும் ஒன்னும் கெட்டுபோகலை முயற்சி செய்து முந்து.
Rate this:
Cancel
vns - Delhi,யூ.எஸ்.ஏ
28-ஜூலை-202111:27:58 IST Report Abuse
vns இதெல்லாம் சாதனைகளா? தமிழக கல்லூரி மாணவர்களின் திறமை இவ்வளவுதானா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X