பொது செய்தி

தமிழ்நாடு

கஸ்துாரிநாயக்கன்பாளையத்தில் சாலை 'தாறுமாறு'

Added : ஜூலை 28, 2021
Share
Advertisement
நிரம்பி வழியுது குப்பை தொட்டிகணபதி, மீனாட்சி நகர், இரண்டாவது வீதிக்கு, துாய்மை பணியாளர்கள் வராததால், இப்பகுதியில் வைக்கப்பட்டுள்ள குப்பை தொட்டி நிரம்பிய நிலையில், இதன் அருகிலேயே குப்பை குவிக்கப்படுகிறது; சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.- தாஸ், மீனாட்சி நகர்.ஆக்கிரமிப்பால் அவதிகாந்திபுரம், பாரதியார் ரோடு, நியூசித்தாபுதுாரில், சாலை மற்றும் நடைபாதையை ஆக்கிரமித்து

நிரம்பி வழியுது குப்பை தொட்டிகணபதி, மீனாட்சி நகர், இரண்டாவது வீதிக்கு, துாய்மை பணியாளர்கள் வராததால், இப்பகுதியில் வைக்கப்பட்டுள்ள குப்பை தொட்டி நிரம்பிய நிலையில், இதன் அருகிலேயே குப்பை குவிக்கப்படுகிறது; சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.- தாஸ், மீனாட்சி நகர்.

ஆக்கிரமிப்பால் அவதிகாந்திபுரம், பாரதியார் ரோடு, நியூசித்தாபுதுாரில், சாலை மற்றும் நடைபாதையை ஆக்கிரமித்து நிறுத்தப்படும் வாகனங்களால், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. பாதசாரிகள் நடக்க வழியின்றி, சிரமப்படுகின்றனர்.- விஜய்மோகன், காந்திபுரம்.

ரோட்டை செப்பனிடணும்உக்கடம் பஸ் ஸ்டாண்ட்டில் இருந்து, செல்வபுரம் செல்லும் பை-பாஸ் ரோடு, குண்டும் குழியுமாக உள்ளது. வாகன போக்குவரத்து அதிகம் நிறைந்த இச்சாலையில், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இச்சாலையை செப்பனிட வேண்டும்.- சுதாகர், பேரூர்.

குழாய் உடைப்பால் வீணாகுது குடிநீர்மாநகராட்சி, 99வது வார்டுக்கு உட்பட்ட, கோணவாய்க்கால்பாளையம், பத்மாலயா அபார்ட்மென்ட் அருகில், குழாய் உடைப்பால், குடிநீர் வீணாகி சாலையில் ஓடுகிறது.- கணேஷ், கோணவாய்க்கால் பாளையம்.

சாக்கடை கால்வாய்க்கு சிலாப்மாநகராட்சி, 24வது வார்டுக்கு உட்பட்ட, பூ மார்க்கெட், சித்தி விநாயகர் கோவில் வீதி, கிருஷ்ணா பேக்கரி அருகில், சாக்கடை கால்வாய் சிலாப் இல்லாமல் திறந்த நிலையில் உள்ளது. இக்கால்வாயை சிலாப் அமைத்து மூட வேண்டும்.- ஹரிகரன், சித்தி விநாயகர் கோவில் வீதி.

போக்குவரத்து நெரிசல்வடமதுரையில் இருந்து, பன்னிமடை செல்லும் சாலை, வி.எஸ்.கே. நகர் பஸ் ஸ்டாப் அருகில், சாலையை ஆக்கிரமித்து நிறுத்தப்படும், இருசக்கர வாகனங்களால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.- பாபு, பன்னிமடை.

சிதிலமடைந்த கம்பத்தை மாற்றணும்மேட்டுப்பாளையம் ரோடு, கவுண்டர்மில், திருவள்ளுவர் வீதி 1, கிரீன் பீல்டு பள்ளி எதிரில் உள்ள, மின் கம்பம் சிதிலமடைந்துள்ளது. இக்கம்பத்தை அகற்றிவிட்டு புது கம்பம் அமைக்க வேண்டும்.- ராஜரங்கநாதன், திருவள்ளுவர் வீதி.

பாதசாரிகளுக்கு ஆபத்துஅவிநாசி ரோடு, பீளமேடு, ஸ்டேட் பாங்க் அருகில் உள்ள, நடைபாதையில் சிலாப் உடைந்துள்ளது. பாதசாரிகள் இதில் விழுந்து விபத்துக்குள்ளாகும் முன், இதை சீரமைக்க வேண்டும்.-யுவராஜ், திருமகள் நகர்.

மின் வெட்டால் அவதிவெள்ளலுார், செந்துார் ஜெயம் கார்டன், சாய் கார்டன், பேச்சியம்மன் கோவில் பின்புறம் உள்ள, பகுதிகளில், இரவு நேரத்தில் அடிக்கடி மின் தடை ஏற்படுகிறது; மக்கள் அவஸ்தைப்படுகின்றனர்.- ஸ்ரீதர், வெள்ளலுார்.

ஆக்கிரமிப்பின் பிடியில் சாலைமாநகராட்சி, 61வது வார்டுக்கு உட்பட்ட, சிங்காநல்லுார், பிள்ளையார் கோவில் வீதியில், சாலையை ஆக்கிரமித்து, பழைய பொருட்கள் குவிக்கப்பட்டுள்ளன. இதனால், சாலை குறுகிவிட்டது; வாகனங்களில் செல்வோர் தடுமாறுகின்றனர்.- செந்தில்குமார், சிங்காநல்லுார்.

விளக்கு எரிவதில்லைசிங்காநல்லுார், விவேகானந்தா நகரில் உள்ள, மின் கம்பத்தில்(எண்:13) கடந்த சில மாதங்களாக, விளக்கு எரிவதில்லை. மின் வாரியத்தில் பலமுறை முறையிட்டும் பலனில்லை. இப்பகுதி இருளில் மூழ்கியுள்ளது.- ஏகாம்பரம், விவேகானந்தா நகர்.

இருட்டில் தவிக்குது ஹட்கோ காலனிதுடியலுார் அருகே வெள்ளக்கிணர், ஹட்கோ காலனி, பேஸ் 1 பகுதியில் உள்ள, மின் கம்பங்களில் ஒன்றில் கூட, விளக்கு எரிவதில்லை. மின் வாரியத்தில் புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை.- ரங்கராஜன், ஹட்கோ காலனி.

சாலையை சீரமைக்கணும்வடவள்ளி, கஸ்துாரிநாயக்கன்பாளையம், அப்பல்லோ மெடிக்கல்ஸ் அருகில், வேகத்தடையை ஒட்டி, சாலை குண்டும் குழியுமாக உள்ளது; இருசக்கர வாகன ஓட்டிகள் அடிக்கடி விழுந்து, விபத்துக்குள்ளாகின்றனர். இச்சாலையை சீரமைக்க வேண்டும்.- மனோகரன், வடவள்ளி.

விளக்கு எரிந்து பல மாதங்களாச்சு!மாநகராட்சி, 61வது வார்டுக்கு உட்பட்ட, சிங்காநல்லுார், லட்சுமணன் நகர், இரண்டாவது வீதியில் உள்ள, மின் கம்பத்தில்(எண்: 11) ஆறு மாதங்களாக விளக்கு எரிவதில்லை.- நிதின், லட்சுமணன் நகர்.

அடிப்படை வசதியில்லைமாநகராட்சி, 75வது வார்டுக்கு உட்பட்ட, திருச்சி ரோடு, சென்ட்ரல் ஸ்டுடியோ, கதிரவன் கார்டனில், குப்பை தொட்டி, சாக்கடை கால்வாய் வசதிகள் இல்லை. இத்துடன், இங்குள்ள பூங்காவும் பராமரிப்பின்றி உள்ளது.- அஜித், கதிரவன் கார்டன்.

காமராஜ் வீதியில் துர்நாற்றம்மாநகராட்சி, 69வது வார்டுக்கு உட்பட்ட, காமராஜ் வீதியில், கடந்த ஒரு வாரமாக, பாதாள சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு, மேனுவல் ேஹால் வழியாக, கழிவுநீர் வெளியேறி, சாலையில் ஓடுகிறது. இப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது.- சீனிவாசன், ஒலம்பஸ்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X