பொது செய்தி

தமிழ்நாடு

நிரம்பியது வைகை அணை:விடப்பட்டது வெள்ள அபாய எச்சரிக்கை

Added : ஜூலை 28, 2021
Share
Advertisement
ஆண்டிபட்டி:வைகை அணை நீர்மட்டம் 69 அடிஆனதை தொடர்ந்து, வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு, வினாடிக்கு 730 கன அடி உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.தேனி மாவட்டத்தில் பெய்து வரும் மழையால், வைகை அணை நீர் மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. நேற்று மதியம் 1:00 மணிக்கு அணை நீர்மட்டம், மொத்தமுள்ள 71 அடியில் 69 அடியாக உயர்ந்தது. தொடர்ந்து வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு, அணைக்கு வரும்

ஆண்டிபட்டி:வைகை அணை நீர்மட்டம் 69 அடிஆனதை தொடர்ந்து, வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு, வினாடிக்கு 730 கன அடி உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.

தேனி மாவட்டத்தில் பெய்து வரும் மழையால், வைகை அணை நீர் மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. நேற்று மதியம் 1:00 மணிக்கு அணை நீர்மட்டம், மொத்தமுள்ள 71 அடியில் 69 அடியாக உயர்ந்தது. தொடர்ந்து வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு, அணைக்கு வரும் உபரி நீர் பெரிய மதகுகள் மூலம் ஆற்றின் வழியாக திறந்து விடப்பட்டுள்ளது.

அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 1,731 கன அடியாக இருந்தது. அணையில் இருந்து மதுரை, திண்டுக்கல் மாவட்ட பாசனத்திற்கு கால்வாய் வழியாக வினாடிக்கு 900 கன அடியும், மதுரை, ஆண்டிபட்டி - சேடப்பட்டி கூட்டு குடிநீர் திட்டத்திற்கு 69 கன அடியும் ஏற்கனவே வெளியேறுகிறது.

உபரியாக 730 கன அடி நீர் நேற்று ஆற்றில் திறந்து விடப்பட்டுஉள்ளது. வைகை ஆற்றின் கரையோரங்களில் உள்ள பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க பொதுப்பணி மற்றும் வருவாய்த் துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.இடுக்கி நீர்மட்டம்தென்மேற்கு பருவமழையால் கேரள மாநிலம், இடுக்கி அணைக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

அணையின் மொத்த உயரமான 554 அடியில் நீர்மட்டம் 371 அடியாக இருந்தது.நீர்மட்டம், 372.58 அடியை எட்டியதும், முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்படும்.கடந்த 1981, 1992 மற்றும் 2018ல் தண்ணீர் நிரம்பியதால் அணை திறக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X