பொது செய்தி

தமிழ்நாடு

'டாய் ஹேக்கத்தான்' போட்டி 'அமிர்தா' மாணவர்கள் வெற்றி

Added : ஜூலை 28, 2021
Share
Advertisement
கோவை:மத்திய அரசின் கல்வித்துறை அமைச்சகம், அகில இந்திய தொழில்நுட்ப கல்வி, பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு உள்ளிட்ட துறைகள் சார்பில், பொம்மைகள் தயாரிப்பில், இறக்குமதியை குறைத்து, ஏற்றுமதியை அதிகரிக்க, ஆன்லைன் மூலம், 'டாய் ஹேக்கத்தான்' போட்டி அறிவிக்கப்பட்டது.இப்போட்டியின் இறுதி சுற்றில், 17 ஆயிரம் மாணவர் குழுக்கள் பங்கேற்றன. இதில், 117 குழுக்கள், இறுதிப்போட்டியில்

கோவை:மத்திய அரசின் கல்வித்துறை அமைச்சகம், அகில இந்திய தொழில்நுட்ப கல்வி, பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு உள்ளிட்ட துறைகள் சார்பில், பொம்மைகள் தயாரிப்பில், இறக்குமதியை குறைத்து, ஏற்றுமதியை அதிகரிக்க, ஆன்லைன் மூலம், 'டாய் ஹேக்கத்தான்' போட்டி அறிவிக்கப்பட்டது.இப்போட்டியின் இறுதி சுற்றில், 17 ஆயிரம் மாணவர் குழுக்கள் பங்கேற்றன. இதில், 117 குழுக்கள், இறுதிப்போட்டியில் வெற்றி பெற்றுள்ளன.இதில், சென்னை, அமிர்தா விஷ்வ வித்யாபீடம் கல்லுாரியில் இருந்து, ஐந்து மாணவர் குழுக்களும் அடக்கம். 'யுக்தி' குழுவில், முதலாமாண்டு மாணவர்கள் மட்டுமே பங்கேற்று, தேசிய அளவில் வெற்றி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.ஆன்லைன் மூலம், நமது பாரம்பரியம், பண்பாட்டை அடையாளப்படுத்தும் பொம்மைகள் தயாரிப்பு குறித்து, மாணவர்கள் விளக்கியது, பலரின் கவனத்தை ஈர்த்தது. கல்லுாரி இயக்குனர் மணிகண்டன், முதல்வர் சங்கர் ஆகியோர், மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X