எடியூரப்பாவுக்கு காங்., எம்.எல்.சி. இப்ராஹிம் ஆதரவு

Added : ஜூலை 28, 2021
Share
Advertisement
பெங்களூரு: ''வயதாகி விட்டதாகக் கூறி எடியூரப்பாவை முதல்வர் பதவியிலிருந்து நீக்கியது சரியில்லை. அவர் இன்னொரு திருமணம் செய்தாலும், நான்கு பிள்ளைகள் பெற்றெடுக்கும் பலம் அவரிடம் உள்ளது,'' என, காங்கிரஸ் எம்.எல்.சி., இப்ராஹிம் தெரிவித்தார்.முன்னாள் முதல்வர் சித்தராமையாவுக்கு நெருக்கமானவரான, காங்கிரஸ் எம்.எல்.சி., இப்ராஹிம், ம.ஜ.த., - பா.ஜ., என அனைத்து தலைவர்களிடமும் அன்புடன்

பெங்களூரு: ''வயதாகி விட்டதாகக் கூறி எடியூரப்பாவை முதல்வர் பதவியிலிருந்து நீக்கியது சரியில்லை. அவர் இன்னொரு திருமணம் செய்தாலும், நான்கு பிள்ளைகள் பெற்றெடுக்கும் பலம் அவரிடம் உள்ளது,'' என, காங்கிரஸ் எம்.எல்.சி., இப்ராஹிம் தெரிவித்தார்.
முன்னாள் முதல்வர் சித்தராமையாவுக்கு நெருக்கமானவரான, காங்கிரஸ் எம்.எல்.சி., இப்ராஹிம், ம.ஜ.த., - பா.ஜ., என அனைத்து தலைவர்களிடமும் அன்புடன் பழக கூடியவர். பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், பெங்களூரில் அவர் கூறியதாவது:
வயதாகி விட்டதாகக் கூறி எடியூரப்பாவை முதல்வர் பதவியிலிருந்து நீக்கியது சரியில்லை. இதே, பா.ஜ., கேரள முதல்வர் வேட்பாளராக, 80 வயது நிரம்பிய ஸ்ரீதரனை அறிவித்தது. அவரையும், எடியூரப்பாவையும் நடக்க விட்டால் யார் வேகமாக நடப்பர் என்று பார்ப்போமா?இன்னொரு திருமணம் செய்தாலும், நான்கு பிள்ளைகள் பெற்றெடுக்கும் பலம் எடியூரப்பாவிடம் உள்ளது.
ஒவ்வொருவருக்கு ஒரு நீதியா? எங்களுக்கு அவர் தான் மேலிடம். குற்றச்சாட்டு இருப்பது சகஜம் தான். சிரித்த முகத்துடன் நன்றாக உள்ளார். இவரை போன்ற தலைவரை இனி, கர்நாடக அரசியலில் பார்க்க முடியாது. இவ்வாறு இப்ராஹிம் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X