பொது செய்தி

தமிழ்நாடு

முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் 6ம் ஆண்டு நினைவு தினம்

Added : ஜூலை 28, 2021
Share
Advertisement
ராமேஸ்வரம்:முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் ஆறாவது ஆண்டு நினைவு தினத்தையொட்டி அவரது நினைவிடத்தில் அதிகாரிகள், உறவினர்கள் அஞ்சலி செலுத்தினர்.முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் ஆறாவது ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப் பட்டது.ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் அருகே பேக்கரும்பில் உள்ள அப்துல் கலாம் நினைவிடத்தில் கலெக்டர் சந்திரகலா, டி.ஐ.ஜி., மயில்வாகனன்,அப்துல் கலாம்

ராமேஸ்வரம்:முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் ஆறாவது ஆண்டு நினைவு தினத்தையொட்டி அவரது நினைவிடத்தில் அதிகாரிகள், உறவினர்கள் அஞ்சலி செலுத்தினர்.

முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் ஆறாவது ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப் பட்டது.ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் அருகே பேக்கரும்பில் உள்ள அப்துல் கலாம் நினைவிடத்தில் கலெக்டர் சந்திரகலா, டி.ஐ.ஜி., மயில்வாகனன்,அப்துல் கலாம் லட்சிய இந்தியா இயக்க தலைவர் பொன்ராஜ், நடிகர் தாமு, உறவினர்கள் நசீமா மரைக்காயர், பேரன்கள் ஷேக்சலீம், ஷேக்தாவூத், ராமேஸ்வரம் ஜமாத் நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர்.

பேரன் ஷேக்சலீம் கூறுகையில், ''2017 ஜூலை 27ல் அப்துல் கலாம் நினைவிடம் திறக்கப்பட்டது. அப்போது நினைவகம் அருகில், 2019க்குள் அறிவுசார் மையம் அமைக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்தது. விரைந்து அமைக்க வேண்டும்,'' என்றார்.

பொன்ராஜ் கூறுகையில், ''கலாமின் கனவு திட்டமான 130 கோடி மக்கள்; 130 கோடி மரங்கள் வளர்க்க, 'தாய் பூமிக்காக என் மரங்கள்' எனும் திட்டத்தில் குழந்தைகள் முதல் 21 வயதுக்கு உட்பட்டோர், பழம் தரும் மரங்கள் நட்டு பராமரித்து இணையதளத்தில், 'அப்டேட்' செய்ய வேண்டும். சிறப்பாக மரம் வளர்த்தவருக்கு பரிசு வழங்கப்படும்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X