காசிம் வயலில் திடீர் காய்ச்சல்: பரிசோதனைக்காக ரத்த மாதிரி சேகரிப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

காசிம் வயலில் திடீர் காய்ச்சல்: பரிசோதனைக்காக ரத்த மாதிரி சேகரிப்பு

Added : ஜூலை 28, 2021
Share
கூடலுார்:கூடலுார், காசிம்வயல் பகுதியில் சிலருக்கு காய்ச்சல் ஏற்பட்ட நிலையில் அங்கு வாழும் மக்களின் ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டது.கூடலுார் காசிம்வயல் உள்ளிட்ட சில பகுதிகளில், சிலருக்கு திடீரென காய்ச்சல் ஏற்பட்டு சிகிச்சைக்காக, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.தொடர்ந்து, மாவட்ட மலேரியா தடுப்பு அலுவலர் டாக்டர் கபாலி, சுகாதார நிலைய டாக்டர்
 காசிம் வயலில் திடீர் காய்ச்சல்:  பரிசோதனைக்காக ரத்த மாதிரி சேகரிப்பு

கூடலுார்:கூடலுார், காசிம்வயல் பகுதியில் சிலருக்கு காய்ச்சல் ஏற்பட்ட நிலையில் அங்கு வாழும் மக்களின் ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டது.கூடலுார் காசிம்வயல் உள்ளிட்ட சில பகுதிகளில், சிலருக்கு திடீரென காய்ச்சல் ஏற்பட்டு சிகிச்சைக்காக, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.தொடர்ந்து, மாவட்ட மலேரியா தடுப்பு அலுவலர் டாக்டர் கபாலி, சுகாதார நிலைய டாக்டர் தாமரைசெல்வன், துறை ஊழியர்கள் வீடு, வீடாக சென்று காய்ச்சல் குறித்த பரிசோதனை மேற்கொண்டு ரத்த மாதிரியை சேகரித்தனர்.நகராட்சி சுகாதார ஆய்வாளர் சரவணன் தலைமையில் நகராட்சி ஊழியர்கள் இயந்திரம் மூலம் புகை அடிக்கும் பணியிலும்; வீடுகளில் தண்ணீர் தேங்கும் இடங்களில், கழிவு பொருட்களை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.சுகாதாரத்துறை துணை இயக்குனர் டாக்டர் பாலுசாமி, கூறுகையில்,''அப்பகுதி மக்களிடம் ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன் முடிவுகளின் அடிப்படையில் சிகிச்சை அளிக்கப்படும். முன்னெச்சரிக்கையாக, 25 நகராட்சி ஊழியர்கள், கொசு ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்,'' என்றார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X