பொது செய்தி

தமிழ்நாடு

நகருக்குள் வந்த மான்: நாய்கள் கடித்ததால் சிகிச்சை

Added : ஜூலை 28, 2021
Share
Advertisement
குன்னுார்:குன்னுார் நகர பகுதியில், புள்ளிமானை நாய்கள் கடித்ததால், வனத்துறை மீட்டு சிகிச்சை அளித்தனர்.குன்னுார் பஸ் ஸ்டாண்ட் தீயணைப்பு நிலையம் அருகேயுள்ள இடத்தில், வனத்துறை சார்பில் மரக்கன்றுகள் நடவு செய்து பராமரிக்கப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு, வழிதவறி வந்த புள்ளிமான் இந்த இடத்தில் தஞ்சமடைந்தது.இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு தெருநாய்கள்
 நகருக்குள் வந்த மான்:  நாய்கள் கடித்ததால் சிகிச்சை

குன்னுார்:குன்னுார் நகர பகுதியில், புள்ளிமானை நாய்கள் கடித்ததால், வனத்துறை மீட்டு சிகிச்சை அளித்தனர்.குன்னுார் பஸ் ஸ்டாண்ட் தீயணைப்பு நிலையம் அருகேயுள்ள இடத்தில், வனத்துறை சார்பில் மரக்கன்றுகள் நடவு செய்து பராமரிக்கப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு, வழிதவறி வந்த புள்ளிமான் இந்த இடத்தில் தஞ்சமடைந்தது.இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு தெருநாய்கள் விரட்டி சென்று மானின் கால், கழுத்து உள்ளிட்ட இடங்களில் கடித்துள்ளன. காயமடைந்து சிரமத்துடன் தவித்து வந்ததை பார்த்தவர்கள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.ரேஞ்சர் சசிகுமார் உத்தரவின்பேரில், வனவர் ராஜ்குமார் தலைமையில் வனத்துறையினர் மீட்டு, கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்தனர். முதுமலை வனப்பகுதியில் விட வனத்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X