சம்பவம் செய்தி

தமிழ்நாடு

நொய்யல் ஆற்றில் மூழ்கி ஒருவர் பலி

Added : ஜூலை 28, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
தொண்டாமுத்தூர்:கோவை வடவள்ளி, மடத்துாரை சேர்ந்தவர் சதீஷ், 28; டிரைவர். இவர், கடந்த, 25ம் தேதி, தனது நண்பர்கள் சரவணன், பாலமுருகன் உள்ளிட்ட, ஆறு பேருடன், சித்திரைச்சாவடி அருகே, நொய்யல் ஆற்றின் கரையில் அமர்ந்து மது அருந்தியுள்ளனர். அனைவரும் மது போதையில், ஆற்றில் இறங்கி குளித்துள்ளனர். அப்போது, சதீஷ் நீரில் மூழ்கியுள்ளார்.இதை கண்ட சரவணன் உள்ளிட்ட நண்பர்கள், சதீஷை காப்பாற்ற

தொண்டாமுத்தூர்:கோவை வடவள்ளி, மடத்துாரை சேர்ந்தவர் சதீஷ், 28; டிரைவர். இவர், கடந்த, 25ம் தேதி, தனது நண்பர்கள் சரவணன், பாலமுருகன் உள்ளிட்ட, ஆறு பேருடன், சித்திரைச்சாவடி அருகே, நொய்யல் ஆற்றின் கரையில் அமர்ந்து மது அருந்தியுள்ளனர். அனைவரும் மது போதையில், ஆற்றில் இறங்கி குளித்துள்ளனர். அப்போது, சதீஷ் நீரில் மூழ்கியுள்ளார்.இதை கண்ட சரவணன் உள்ளிட்ட நண்பர்கள், சதீஷை காப்பாற்ற முயன்றனர். ஆனால், சதீஷ் ஆற்றில் அடித்து செல்லப்பட்டார். இதனால், பயந்த நண்பர்கள், சம்பவம் குறித்து யாரிடமும் கூறாமல் மறைத்துள்ளனர்.இந்நிலையில், இரண்டு நாட்களாக, சதீஷ் வீட்டுக்கு வராததால், அவரது குடும்பத்தினர், நண்பர்களிடம் கேட்டுள்ளனர். இதையடுத்து, நடந்த சம்பவத்தை தெரிவித்துள்ளனர். போலீசார் மற்றும் தொண்டாமுத்தூர் தீயணைப்பு துறையினர், சதீஷ் உடலை தேடும் பணியில் நேற்று ஈடுபட்டனர். நான்கு மணி நேர தேடுதலுக்கு பின், சடலம் மீட்கப்பட்டு, கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.ஆலாந்துறை போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
28-ஜூலை-202116:53:01 IST Report Abuse
Ram Pollachi அடிச்ச மப்பு இறங்கி போச்சு!
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X