பொது செய்தி

இந்தியா

உலக பட்டியலில் குஜராத்தின் தோலாவீரா

Updated : ஜூலை 28, 2021 | Added : ஜூலை 28, 2021
Share
Advertisement
புதுடில்லி : உலக பாரம்பரிய சின்னங்களின் பட்டியலில் குஜராத் மாநிலத்தின் தோலாவீரா நகரை யுனெஸ்கோ எனப்படும் ஐக்கிய நாடுகள் சபையின் கல்வி அறிவியல் கலாசார அமைப்பு சேர்த்துள்ளது.யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய சின்னங்களை தேர்வு செய்யும் கமிட்டியின் கூட்டம் சீனாவின் பூஜோவ் நகரில் நடக்கிறது. இந்த கூட்டத்தில் பட்டியலில் புதிதாக சேர்க்கப்படும் இடங்கள் பற்றி ஆய்வு
UNESCO, World Heritage, Dholavira, Gujarat, Harappan City

புதுடில்லி : உலக பாரம்பரிய சின்னங்களின் பட்டியலில் குஜராத் மாநிலத்தின் தோலாவீரா நகரை யுனெஸ்கோ எனப்படும் ஐக்கிய நாடுகள் சபையின் கல்வி அறிவியல் கலாசார அமைப்பு சேர்த்துள்ளது.


latest tamil news



யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய சின்னங்களை தேர்வு செய்யும் கமிட்டியின் கூட்டம் சீனாவின் பூஜோவ் நகரில் நடக்கிறது. இந்த கூட்டத்தில் பட்டியலில் புதிதாக சேர்க்கப்படும் இடங்கள் பற்றி ஆய்வு செய்யப்படுகிறது. தெலுங்கானா மாநிலம் வாரங்கல்லில் உள்ள ராமப்பா கோயில் உலக பாரம்பரிய பட்டியலில் சமீபத்தில் சேர்க்கப்பட்டது.


latest tamil news



இந்நிலையில் குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டத்தில் சிந்து சமவெளி நாகரிகத்தின் அடையாளமாக விளங்கும் தோலாவீரா நகரை உலக பாரம்பரிய பட்டியலில் யுனெஸ்கோ நேற்று சேர்த்துள்ளது. இத்துடன் சேர்த்து உலக பாரம்பரிய சின்னங்களின் பட்டியலில் நம் நாட்டின் 40 இடங்கள் இடம் பெற்றுள்ளன.


latest tamil news


Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X