அரசியல் செய்தி

தமிழ்நாடு

இது உங்கள் இடம்: அ.தி.மு.க.,வினர் உஷாராக இருக்கணும்!

Updated : ஜூலை 28, 2021 | Added : ஜூலை 28, 2021 | கருத்துகள் (31)
Share
Advertisement
உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம்:கோ.வெங்கடேசன், திருநின்றவூர், திருவள்ளூர் மாவட்டத்திலிருந்து எழுதுகிறார்: 'சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க., வெற்றி பெறும் என, பழனிசாமி, பன்னீர்செல்வம் நம்பிக்கை தெரிவித்ததால் தான், நான் ஒதுங்கியிருந்தேன்... ஆனால் கட்சி தோற்று விட்டது. எனவே அ.தி.மு.க.,வை மீண்டும் பழைய பொலிவுடன் திகழ வைக்க, நான்
ADMK, Sasikala, சசிகலா


உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம்:


கோ.வெங்கடேசன், திருநின்றவூர், திருவள்ளூர் மாவட்டத்திலிருந்து எழுதுகிறார்: 'சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க., வெற்றி பெறும் என, பழனிசாமி, பன்னீர்செல்வம் நம்பிக்கை தெரிவித்ததால் தான், நான் ஒதுங்கியிருந்தேன்... ஆனால் கட்சி தோற்று விட்டது. எனவே அ.தி.மு.க.,வை மீண்டும் பழைய பொலிவுடன் திகழ வைக்க, நான் அரசியலுக்கு வருகிறேன்' என சசிகலா 'உதார்' விடுகிறார். இவர் தன்னை இன்னொரு ஜெயலலிதாவாகவே எண்ணி கொண்டிருக்கிறார் போலிக்கிறது.

சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டும், பல பொதுக்கூட்டங்களில் பேசியும், பம்பரமாக சுழன்று கட்சி பணியாற்றி அ.தி.மு.க.,வை வளர்த்தது போல ஒரு நினைப்பு அவருக்கு. தன்னை 'தியாக தலைவி' என அழைத்து கொள்ளும் சசிகலா, அப்படி என்ன தியாகம் செய்தார் என்பதை சொல்ல வேண்டும்.

அ.தி.மு.க., ஆட்சியில், 'மன்னார்குடி குடும்பம்' வாங்கி குவித்த சொத்துக்களை காப்பதற்காக, இப்போது அரசியல் நாடகம் நடத்துகிறார். ஜெயலலிதா மருத்துவமனையில் மரணிக்கும் வரை இருந்த 75 நாட்களும், அவர் அருகில் இருந்தவர் சசிகலா. ஜெயலலிதாவின் மரண மர்ம முடிச்சு இன்னமும் அவிழவில்லை.


latest tamil newsஜெயலலிதா மரணத்திற்கு பின், கட்சியை கைப்பற்றி, அசுர வேகத்தில் முதல்வராக துடித்தவர் தான் சசிகலா. ஜெயலலிதாவின் செல்வாக்கை முழுமையாக பயன்படுத்தி கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை குவித்து, அ.தி.மு.க.,வுக்கு இருந்த நற்பெயரை 'டேமேஜ்' செய்ததில், சசிகலாவுக்கு பெரும் பங்கு உண்டு. இது தான், அ.தி.மு.க.,வுக்கு அவர் செய்த 'நற்பணி!'

தற்போது அ.தி.மு.க.,வில் குழப்பம் விளைவிக்க முயற்சிக்கிறார். அவர், அ.தி.மு.க.,வை கைப்பற்ற நினைப்பதெல்லாம், சுயநலத்திற்கு தானே தவிர, கட்சி நலனுக்காக அல்ல. அ.தி.மு.க., தலைமையும், தொண்டர்களும், சசிகலாவிடம் உஷாராக இருப்பது நல்லது.


Advertisement
வாசகர் கருத்து (31)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Dhurvesh - TAMILANADU ,இந்தியா
28-ஜூலை-202121:33:59 IST Report Abuse
Dhurvesh பாவம் ADMK தலைவர்கள் போனதடவ மோடி சொன்னார் என்று MANGO MAN க்கு RS MP , இப்போ வன்டு முருகனுக்கு RS MP அப்போ கடசிக்கு உழைத்தவர்கள் நிலை பஜ கோவிந்தம் தானோ
Rate this:
Cancel
28-ஜூலை-202117:36:32 IST Report Abuse
Solairaj Joseph சசிகலா இவ்வளவு தைரியமாக வேகமாக முன்னேறி வர காரணம், மோடி, அமித்ஷா தான். அமித்ஷா எவ்வளவோ எடுத்துரைத்து பார்த்து கூட தேர்தலுக்கு முன்பே சசிகலாவை சேர்க்காமல் விட்டுவிட்டார்கள். இனிமேல் மோடியோ அமித்ஷா வோ இவர்களை காப்பாற்ற முடியாது.
Rate this:
தத்வமசி - சென்னை ,இந்தியா
28-ஜூலை-202121:03:44 IST Report Abuse
தத்வமசி ஜகத் கஸ்பர், பொன்னையா போன்ற பாவாடைகளிடம் சொல்லவும். அவர்களிடம் எல்லோருமே பயந்து கொண்டு இருக்கின்றன....
Rate this:
Kanthan Iyengaar - Sydney,ஆஸ்திரேலியா
28-ஜூலை-202121:30:27 IST Report Abuse
Kanthan Iyengaarதத்வமஸி..நீர் பார்வை குறைபாடு கொண்டுளீர் வ்வொய்...கிறிஸ்துவர்களை , முகமதியர்களை மட்டும் பார்க்க தெரிந்த நீர் அர்ஜின் சம்பத்தை போன்ற உறுபடிகளையும் பாரீர். அர்ஜுன் சம்பத்கூட இருக்கும் இன்ன பிற இந்து முன்னணி கசடுகள் போன்ற ஆசாமிகள் நம்ம மதத்துக்கு இழைக்கும் அநீதி பிரதியா செய்யறதை விட அதிகம்.......
Rate this:
Cancel
RajanRajan - kerala,இந்தியா
28-ஜூலை-202117:13:06 IST Report Abuse
RajanRajan என்ன திருடி படம் காட்டுறாங்களோ.
Rate this:
28-ஜூலை-202120:13:35 IST Report Abuse
தர்மராஜ் தங்கரத்தினம்யாருக்கு மோடி & co வுக்கா என...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X