இந்தியா

பால் குளிரூட்டும் நிலையம் சபாநாயகர் செல்வம் ஆய்வு

Added : ஜூலை 28, 2021
Share
Advertisement
அரியாங்குப்பம் : பூரணாங்குப்பத்தில் புதிதாக அமைக்கப்பட்ட பால் குளிரூட்டும் நிலையத்தை சபாநாயகர் செல்வம் ஆய்வு செய்தார்.தவளக்குப்பம் அடுத்த பூரணாங்குப்பத்தில், ரூ.15 லட்சம் செலவில், ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட, பால் குளிரூட்டும் நிலையம் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது.இந்த நிலையத்தை, சபாநாயகர் செல்வம் நேற்று ஆய்வு செய்தார்.அப்போது, மகளிர் கூட்டுறவு சங்கங்கள்,

அரியாங்குப்பம் : பூரணாங்குப்பத்தில் புதிதாக அமைக்கப்பட்ட பால் குளிரூட்டும் நிலையத்தை சபாநாயகர் செல்வம் ஆய்வு செய்தார்.

தவளக்குப்பம் அடுத்த பூரணாங்குப்பத்தில், ரூ.15 லட்சம் செலவில், ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட, பால் குளிரூட்டும் நிலையம் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது.இந்த நிலையத்தை, சபாநாயகர் செல்வம் நேற்று ஆய்வு செய்தார்.அப்போது, மகளிர் கூட்டுறவு சங்கங்கள், செயல்பாடுகள் குறித்து கேட்ட றிந்தார். பால்வள அபிவிருத்தி அதிகாரி அன்பரசன், முதுநிலை ஆய்வாளர் ஜான்சுந்தர், கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கங்களின் நிர்வாகிகள் உடனிருந்தனர்.

கூட்டுறவு சங்கங்கள் சார்பில் பல்வேறு கோரிக்கைகள் சபாநாயகரிடம் தெரிவிக்கப்பட்டது.கோரிக்கைகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களுக்கு தேர்தல் நடத்துவது குறித்து அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என சபாநாயகர் தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X