இந்தியா

அப்துல் கலாம் நினைவு தினம் கவர்னர், முதல்வர் மரியாதை

Added : ஜூலை 28, 2021
Share
Advertisement
புதுச்சேரி : புதுச்சேரி அரசு சார்பில், முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் 6ம் ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது.லாஸ்பேட்டையில் உள்ள அப்துல் கலாம் அறிவியல் மையம் மற்றும் கோளரங் கத்தில் அமைந்துள்ள அவரது உருவச் சிலைக்கு கவர்னர் தமழிசை, முதல்வர் ரங்கசாமி ஆகியோர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.அறிவியல் தொழில் நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் துறை செயலர்

புதுச்சேரி : புதுச்சேரி அரசு சார்பில், முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் 6ம் ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது.

லாஸ்பேட்டையில் உள்ள அப்துல் கலாம் அறிவியல் மையம் மற்றும் கோளரங் கத்தில் அமைந்துள்ள அவரது உருவச் சிலைக்கு கவர்னர் தமழிசை, முதல்வர் ரங்கசாமி ஆகியோர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.அறிவியல் தொழில் நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் துறை செயலர் ஸ்மிதா, இயக்குநர் தினேஷ் கண்ணன், சீனியர் சுற்றுச் சூழல் பொறியாளர் ரமேஷ் உள்ளிட்டோர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத் தினர்.

கவர்னர் தமிழிசை நிருபர்களிடம் கூறுகையில், 'அப்துல்கலாம் குழந்தைகள் மீது மிகுந்த அன்பு செலுத்தியவர். இளைஞர்களுக்கு நல்ல வழிகாட்டியாக இருந்தவர். அவரது வழியில் இளைஞர்களின் முன்னேற்றத்திற்கு புதுச்சேரி அரசு துணை நிற்கும்' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X