இந்தியா

விமான நிலைய விரிவாக்கப் பணி குறித்து... ஆலோசனை! அமைச்சர், அதிகாரிகள் இன்று ஆய்வு

Added : ஜூலை 28, 2021
Share
Advertisement
புதுச்சேரி : புதுச்சேரி விமான நிலையத்தை மேம்படுத்துவது தொடர்பாக, அதிகாரிகளுடன் சுற்றுலாத் துறை அமைச்சர் ஆலோசனை நடத்தினார்.புதுச்சேரி, லாஸ்பேட்டையில் உள்ள விமான நிலையம், கடந்த 2013ம் ஆண்டு துவங்கப்பட்டது. இந்த விமான நிலையத்திற்கு, முதல் விமானம் பெங்களூருவில் இருந்து இயக்கப்பட்டது.பின்னர் ஏர் இந்தியா நிறுவனம் மூலம், புதுச்சேரி - பெங்களூரு இடையே விமான சேவை துவங்கியது.
விமான நிலைய விரிவாக்கப் பணி குறித்து...  ஆலோசனை! அமைச்சர், அதிகாரிகள் இன்று ஆய்வு

புதுச்சேரி : புதுச்சேரி விமான நிலையத்தை மேம்படுத்துவது தொடர்பாக, அதிகாரிகளுடன் சுற்றுலாத் துறை அமைச்சர் ஆலோசனை நடத்தினார்.

புதுச்சேரி, லாஸ்பேட்டையில் உள்ள விமான நிலையம், கடந்த 2013ம் ஆண்டு துவங்கப்பட்டது. இந்த விமான நிலையத்திற்கு, முதல் விமானம் பெங்களூருவில் இருந்து இயக்கப்பட்டது.பின்னர் ஏர் இந்தியா நிறுவனம் மூலம், புதுச்சேரி - பெங்களூரு இடையே விமான சேவை துவங்கியது. போதிய வரவேற்பு இல்லாததால் விமான சேவை நிறுத்தப்பட்டது.


'உடான்' திட்டம்


மத்தியில் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ., அரசு பொறுப்பேற்றதும், புதிய விமான கொள்கை அறிவிக்கப் பட்டது. இதில், 'உடான்' திட்டத் தின் கீழ், சிறு நகரங்களை வான்வழியாக இணைக்கும் வகையில், விமான பயணத்திற்கான பாதி கட்டணத்தை மத்திய அரசே ஏற்கும் என அறிவித்தது.கடந்த 2017ம் ஆண்டு ஸ்பைஸ் ஜெட் நிறுவனம், புதுச்சேரி- ஐதராபாத் இடையே விமான சேவையை துவக்கியது.

எனினும், தற்போது முறையான விமான சேவை இல்லை. பெரியரக விமானங்கள் வந்து சென்றால் மட்டுமே பயணிகளிடம் வரவேற்பு இருக்கும் என்ற நிலை உள்ளது.


ஓடுதளம் தேவை


தற்போது உள்ள ஓடுதளம் 1,500 மீட்டர் நீளத்திற்கு மட்டுமே உள்ளது. இதில் சிறு விமானங்கள் மட்டுமே வந்து செல்ல முடியும். பெரிய ரக விமானங்கள் வந்து செல்ல, 2,500 மீட்டர் ஓடுதளம் தேவை. பெரிய ரக விமானங்கள் வந்து சென்றால் தான் இந்தியா மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் புதுச்சேரி வர ஏதுவாக இருக்கும்.

தற்போது புதுச்சேரி அரசு, விமான நிலையத்தை விரிவாக்கம் செய்ய முயற்சி மேற்கொண்டு வருகிறது. பெரிய ரக விமானம் வருவதற்கு கூடுதலாக 1000 மீட்டர் ஓடுதளம் அமைக்க, 212 ஏக்கர் நிலம் தேவைப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் .இதற்காக, விமான நிலையத்தை ஒட்டி யுள்ள தமிழக பகுதிகளான மொரட்டாண்டி, ஆரோவில் பகுதிகளிலிருந்து நிலம் ஆர்ஜிதம் செய்ய வேண்டும். இதற்கு தமிழக அரசு ஒத்துழைக்க வேண்டும்.


கவர்னர் வலியுறுத்தல்


கவர்னர் தமிழிசை, சமீபத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலினை சந்தித்து, புதுச்சேரி விமான நிலைய விரிவாக்கத்திற்கு தமிழகப் பகுதியில் நிலம் கையகப்படுத்தி தர கோரிக்கை விடுத்தார்.மேலும், கடந்த 24ம் தேதி, மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிர் ஆதித்திய சிந்தயாவை போனில் தொடர்பு கொண்டு, பேசினார்.

புதுச்சேரியில் கொரோனா காரணமாக நிறுத்தப்பட்ட விமான சேவையை துவங்க வேண்டும். இரவில் விமானம் இறங்க வசதியாக ஓடுபாதையை விரிவுபடுத்த வேண்டும். சர்வதேச விமானங்கள் வந்து செல்வதற்கான ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.


இன்று கள ஆய்வு


புதுச்சேரி விமான நிலையத்தை விரிவாக்கம் செய்வது குறித்து, சுற்றுலாத் துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் தலைமையில் நேற்று ஆலோசனைக் கூட்டம் நடந்தது.காலாப்பட்டு எம்.எல்.ஏ., கல்யாணசுந்தரம், புதுச்சேரி விமான நிலைய இயக்குனர் விஜய் உபாத்யா கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், ஓடுதள விரிவாக்கத்திற்கு நிலம் ஆர்ஜிதம் செய்வது; தமிழக பகுதியில் நிலம் எடுப்பதில் உள்ள பிரச்னைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.விமான நிலைய விரிவாக்கத்திற்கு கூடுதல் இடம் கையகப்படுத்துவது குறித்து, அமைச்சர் மற்றும் அதிகாரிகள் இன்று, அருகில் உள்ள தமிழக பகுதிகளை பார்வையிட்டு, ஆய்வு செய்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X