இந்தியா

சுற்றுலா வளர்ச்சிக் கழக ஊழியர்கள் முற்றுகை போராட்டம்

Added : ஜூலை 28, 2021
Share
Advertisement
புதுச்சேரி : நிலுவை ஊதியத்தை வழங்க வலியுறுத்தி, புதுச்சேரி சுற்றுலா வளர்ச்சிக் கழக ஊழியர்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர்.சுற்றுலா வளர்ச்சிக் கழக கேட்டரிங் மற்றும் நீர் விளையாட்டு ஊழியர்கள் சங்க கூட்டு நடவடிக்கை குழு சார்பில், உப்பளத்தில் உள்ள தலைமை அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டனர். ஒருங்கிணைப்பாளர் விஜயராகவன், இணை ஒருங்கிணைப்பாளர் கஜபதி தலைமை

புதுச்சேரி : நிலுவை ஊதியத்தை வழங்க வலியுறுத்தி, புதுச்சேரி சுற்றுலா வளர்ச்சிக் கழக ஊழியர்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர்.

சுற்றுலா வளர்ச்சிக் கழக கேட்டரிங் மற்றும் நீர் விளையாட்டு ஊழியர்கள் சங்க கூட்டு நடவடிக்கை குழு சார்பில், உப்பளத்தில் உள்ள தலைமை அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டனர். ஒருங்கிணைப்பாளர் விஜயராகவன், இணை ஒருங்கிணைப்பாளர் கஜபதி தலைமை தாங்கினர்.

போராட்டத்தில், சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தில் முறைகேடுகளை களைய வேண்டும். சுண்ணாம்பாறு படகு குழாமில் ஆற்றை ஆழப்படுத்திய மணலை விற்று மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊழியர்களுக்கு ஒன்பது மாத நிலுவை ஊதியத்தை உடனே வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப் பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X