இந்தியா

நெல் பயிர்களில் பூச்சி தாக்குதல்; பாகூர் விவசாயிகள் கவலை

Added : ஜூலை 28, 2021
Share
Advertisement
பாகூர் : பாகூர் பகுதியில், சித்திரை சொர்ணவாரி பருவத்தில் நடவு செய்யப்பட்டுள்ள நெற்பயிர்களில் பூச்சி தாக்குதல் ஏற்பட்டுள்ளதால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.புதுச்சேரியின் நெற்களஞ்சியமான பாகூர் பகுதியில் ஆயிரம் ஹெக்டேருக்கும் அதிகமான பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது.நடப்பு சித்திரை சொர்ணவாரி பருவத்தில் ஐ.ஆர். 50, சின்ன பொன்னி, ஏ.டி.டீ 43, ஏ.டி.டீ., 37 உள்ளிட்ட

பாகூர் : பாகூர் பகுதியில், சித்திரை சொர்ணவாரி பருவத்தில் நடவு செய்யப்பட்டுள்ள நெற்பயிர்களில் பூச்சி தாக்குதல் ஏற்பட்டுள்ளதால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

புதுச்சேரியின் நெற்களஞ்சியமான பாகூர் பகுதியில் ஆயிரம் ஹெக்டேருக்கும் அதிகமான பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது.நடப்பு சித்திரை சொர்ணவாரி பருவத்தில் ஐ.ஆர். 50, சின்ன பொன்னி, ஏ.டி.டீ 43, ஏ.டி.டீ., 37 உள்ளிட்ட நெல் ரகங்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளன.தற்போது நெல் பயிர்களில் பூச்சி தாக்குதல் ஏற்படத் துவங்கி உள்ளது. பாதிக்கப்பட்ட நெற் பயிர்களின் குருத்துகள் மஞ்சள் நிறமாக மாறி, பின்பு முற்றிலும் காய்ந்து விடுகின்றன.

இதனால், பயிர்களின் வளர்ச்சி தடைபட்டு, மகசூல் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.இது குறித்து பங்காரு வாய்க்கால் நீராதார கூட்டமைப்பு தலைவர் சந்திரசேகர் கூறியதாவது:பாசிக் நிறுவனம் மூலமாக விவசாயிகளுக்கு விதை, உரம், பூச்சி கொல்லி மருந்துகள், வேளாண் கருவிகள் மானிய விலையில் வழங்கப்பட்டு வந்தது. தற்போது பாசிக் மூடப்பட்டுள்ளதால், வேளாண் துறை அனுமதி பெற்று சில தனியார் விவசாயிகள் குழுவினர் மூலமாக விதை நெல் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த விதைகள் தரமற்று இருப்பதால் பூச்சி தாக்குதல் மற்றும் மகசூல் குறைவு ஏற்பட காரணமாக அமைகிறது. எனவே, பாசிக் நிறுவனத்திற்கு புத்துயிர் கொடுத்து, விதை, உரம் உள்ளிட்ட இடுபொருட்களை வழங்கிட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.நெற்பயிரில் பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்த வேளாண் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X