புகார் பெட்டி

Added : ஜூலை 28, 2021
Share
Advertisement
மின் விளக்கு எரியவில்லைலாஸ்பேட்டை தாகூர் நகர் முதல் மெயின்ரோட்டில் தெரு விளக்குகள் எரியவில்லை.கோபால், லாஸ்பேட்டை.ஐயங்குட்டிப்பாளையத்தில் இருந்து பத்துக்கண்ணு வரை தெரு விளக்குகள் எரியவில்லை.பக்கிரிசாமி, லாஸ்பேட்டை.உழவர்கரை எம்.ஜி.ஆர்., நகர் இரண்டாவது குறுக்கு தெருவில் மின் விளக்குகள் எரியவில்லை.கனகசபசேன், உழவர்கரை.வேகத்தடை அமைக்கப்படுமா?லாஸ்பேட்டை , முதலாவது

மின் விளக்கு எரியவில்லை

லாஸ்பேட்டை தாகூர் நகர் முதல் மெயின்ரோட்டில் தெரு விளக்குகள் எரியவில்லை.கோபால், லாஸ்பேட்டை.ஐயங்குட்டிப்பாளையத்தில் இருந்து பத்துக்கண்ணு வரை தெரு விளக்குகள் எரியவில்லை.பக்கிரிசாமி, லாஸ்பேட்டை.

உழவர்கரை எம்.ஜி.ஆர்., நகர் இரண்டாவது குறுக்கு தெருவில் மின் விளக்குகள் எரியவில்லை.கனகசபசேன், உழவர்கரை.

வேகத்தடை அமைக்கப்படுமா?

லாஸ்பேட்டை , முதலாவது மெயின்ரோட்டில் 6வது குறுக்கு வீதி சந்திக்கும் இடத்தில் அடிக்கடி விபத்து ஏற்படுவதால், வேகத்தடை அமைக்க வேண்டும்.கோபால், லாஸ்பேட்டை.

போக்குவரத்து நெரிசல்

நெல்லிதோப்பு , புவன்கரே வீதியில் சாலை ஆக்கிரமிப்பு அதிகமாக உள்ளது. இதனால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.சிவக்குமார், முதலியார்பேட்டை.

சாலை மோசம்

காமராஜர் சாலை எல்.ஜ.சி., அலுவலகம் எதிரே உள்ள சாலை சேதமடைந்து, மிகவும் மோசமாக உள்ளது.பாபு, புதுச்சேரி.

மரப்பாலம் சந்திப்பில் சாலை மிகவும் மோசமாக உள்ளதால் விபத்து அபாயம் உள்ளது.சண்முகம், அரியாங்குப்பம்.

கழிவுநீர் வெளியேற்றம்

நேரு வீதி- நெல்லுமண்டி வீதி சந்திப்பு பகுதியில் கழிவு நீர் நிரம்பி வழிவதால் துர்நாற்றம் வீசுகிறது.சீனு, நேரு வீதி.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X