இந்தியா

பி.ஆர்.டி.சி., ஊழியர்கள் பணி நிரந்தரம் அமைச்சரிடம் எதிர்க்கட்சி தலைவர் மனு

Added : ஜூலை 28, 2021
Share
Advertisement
புதுச்சேரி : பி.ஆர்.டி.சி.யில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்கள், தினக்கூலி ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என தி.மு.க., வலியுறுத்தி உள்ளது.சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் சிவா, போக்குவரத்து துறை அமைச்சரை சந்தித்து மனு அளித்தார்.தொ.மு.ச., நிர்வாகிகள் உடன் இருந்தனர்.மனுவில், புதுச்சேரி சாலை போக்குவரத்து கழகத்திற்கு (பி.ஆர்.டி.சி.) புதிய பஸ்களை வாங்க வேண்டும். கடந்த 7

புதுச்சேரி : பி.ஆர்.டி.சி.யில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்கள், தினக்கூலி ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என தி.மு.க., வலியுறுத்தி உள்ளது.

சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் சிவா, போக்குவரத்து துறை அமைச்சரை சந்தித்து மனு அளித்தார்.தொ.மு.ச., நிர்வாகிகள் உடன் இருந்தனர்.மனுவில், புதுச்சேரி சாலை போக்குவரத்து கழகத்திற்கு (பி.ஆர்.டி.சி.) புதிய பஸ்களை வாங்க வேண்டும். கடந்த 7 ஆண்டுகளாக குறைந்த ஊதியத்தில் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்கள் மற்றும் தினக்கூலி ஊழியர்கள், நடத்துனர், ஓட்டுநர்களை நிரந்தரம் செய்ய வேண்டும்.

மூன்று ஆண்டுகளாக செலுத்தாமல் உள்ள எல்.ஐ.சி., இ.பி.எப்., கிராஜூட்டி தொகையை செலுத்த வேண்டும். மார்க்கோபோலோ பஸ்களால் நஷ்டம் ஏற்படுவதால் அவற்றை தடை செய்ய வேண்டும்.பணியின் போது இறந்த தொழிலாளர்களின் வாரிசுகளுக்கு பணி வழங்கிட வேண்டும்' என கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X