இந்தியா

சீனியர் எஸ்.பி., அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்

Added : ஜூலை 28, 2021
Share
Advertisement
புதுச்சேரி : மறியலில் ஈடுபட்டு கைதான வி.சி., கட்சியினர், மாலையில் விடுவிக்கப்பட்டனர். அவர்கள் மீண்டும் சீனியர் எஸ்.பி., அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.திருக்கனுார் அடுத்த கொடாத்துாரை சேர்ந்தவர் கார்த்திகேயன். இவரை, கடந்த ஜூன் 19ம் தேதி, ஒரு கும்பல் கடத்தி சென்று, தாக்கியதாக, திருக்கனுார் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. நான்கு பேர் மீது வழக்கு

புதுச்சேரி : மறியலில் ஈடுபட்டு கைதான வி.சி., கட்சியினர், மாலையில் விடுவிக்கப்பட்டனர். அவர்கள் மீண்டும் சீனியர் எஸ்.பி., அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

திருக்கனுார் அடுத்த கொடாத்துாரை சேர்ந்தவர் கார்த்திகேயன். இவரை, கடந்த ஜூன் 19ம் தேதி, ஒரு கும்பல் கடத்தி சென்று, தாக்கியதாக, திருக்கனுார் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. நான்கு பேர் மீது வழக்கு பதியப்பட்டது.உண்மையான குற்றவாளிகளை கைது செய்யக் கோரி, வி.சி., கட்சியினர் நேற்று உருளையன்பேட்டையில் உள்ள சீனியர் எஸ்.பி., அலுவலகத்தை முற்றுகையிட்டனர். மாநில துணை பொதுச்செயலாளர் பாவாணன் தலைமை தாங்கினார்.

எஸ்.பி., ரட்சனாசிங் தலைமையிலான போலீசார், போராட்டக்காரர்களை தடுத்ததால், மறைமலையடிகள் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.அவர்களை கைது செய்து, கோரிமேடு சமுதாயக் கூடத்தில் தங்க வைத்து, மாலை 5:00 மணிக்கு விடுவித்தனர். மீண்டும் அவர்கள் சீனியர் எஸ்.பி., அலுவலகம் எதிரே போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.வழக்கு விசாரணை அதிகாரியை மாற்றவும், வழக்கில் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். அதை ஏற்று, போராட்டத்தை கைவிட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X