ஐ.என்.டி.யு.சி., ஆலோசனை கூட்டம்; அகில இந்திய நிர்வாகி பங்கேற்பு | Dinamalar

இந்தியா

ஐ.என்.டி.யு.சி., ஆலோசனை கூட்டம்; அகில இந்திய நிர்வாகி பங்கேற்பு

Added : ஜூலை 28, 2021
Share
புதுச்சேரி : புதுச்சேரியில் மறைந்த ஐ.என்.டி.யு.சி., மாநில தலைவர் ரவிச்சந்திரன் படத் திறப்பு நிகழ்ச்சி, நாளை 29ம் தேதி நடக்கிறது.வேல் சொக்கநாதன் திருமண மண்டபத்தில், காலை 9:00 மணிக்கு நிகழ்ச்சி துவங்குகிறது. ஐ.என்.டி.யு.சி., மாநில தலைவர் பாலாஜி தலைமை தாங்குகிறார். துணைத் தலைவர் சொக்கலிங்கம், பொதுச் செயலாளர் நரசிங்கம் முன்னிலை வகிக்கின்றனர்.தமிழக தலைவர் ஜெகநாதன், துவக்கி

புதுச்சேரி : புதுச்சேரியில் மறைந்த ஐ.என்.டி.யு.சி., மாநில தலைவர் ரவிச்சந்திரன் படத் திறப்பு நிகழ்ச்சி, நாளை 29ம் தேதி நடக்கிறது.

வேல் சொக்கநாதன் திருமண மண்டபத்தில், காலை 9:00 மணிக்கு நிகழ்ச்சி துவங்குகிறது. ஐ.என்.டி.யு.சி., மாநில தலைவர் பாலாஜி தலைமை தாங்குகிறார். துணைத் தலைவர் சொக்கலிங்கம், பொதுச் செயலாளர் நரசிங்கம் முன்னிலை வகிக்கின்றனர்.தமிழக தலைவர் ஜெகநாதன், துவக்கி வைக்கிறார். ரவிச்சந்திரன் படத்தை, அகில இந்திய ஐ.என்.டி.யு.சி., தலைவர் சஞ்சீவரெட்டி திறந்து வைக்கிறார்.

முன்னாள் முதல்வர் நாராயணசாமி, வைத்தி லிங்கம் எம்.பி., எம்.எல். ஏ.,க்கள் சிவா, வைத்தியநாதன், மாநில காங்., தலை வர் சுப்ரமணியன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.காலை 11.00 மணிக்கு, ஐ.என்.டி.யு.சி., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடக்கிறது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X