இந்தியா

காமராஜர் அரசு கலைக் கல்லுாரியில் புதிய பாடப்பிரிவு துவக்க கோரிக்கை

Added : ஜூலை 28, 2021
Share
Advertisement
திருபுவனை : கலிதீர்த்தாள்குப்பம் காமராஜர் அரசு கலைக் கல்லுாரியில், புதிய பாடப்பிரிவுகள் துவக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.மதகடிப்பட்டு அடுத்த கலிதீர்த்தாள்குப்பத்தில் காமராஜர் அரசு கலைக் கல்லுாரி இயங்கி வருகிறது. இந்த கல்லுாரியில், திருபுவனை எம்.எல்.ஏ., அங்காளன் ஆய்வு மேற்கொண்டார்.அப்போது, கல்லுாரி முதல்வர் பாபு, துறைத் தலைவர்கள், பேராசிரியர் கள்,

திருபுவனை : கலிதீர்த்தாள்குப்பம் காமராஜர் அரசு கலைக் கல்லுாரியில், புதிய பாடப்பிரிவுகள் துவக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

மதகடிப்பட்டு அடுத்த கலிதீர்த்தாள்குப்பத்தில் காமராஜர் அரசு கலைக் கல்லுாரி இயங்கி வருகிறது. இந்த கல்லுாரியில், திருபுவனை எம்.எல்.ஏ., அங்காளன் ஆய்வு மேற்கொண்டார்.அப்போது, கல்லுாரி முதல்வர் பாபு, துறைத் தலைவர்கள், பேராசிரியர் கள், அலுவலர்கள், ஊழியர்கள் மற்றும் கல்லூரி மாணவ- மாணவிகளிடம் குறைகளை கேட்டறிந்தார்.

கல்லுாரிக்கு புதிய கட்டடங்கள் கட்டித்தர வேண்டும். கிராமப்புற மாணவர்கள் பயன்பெறும் வகையில் 2021-2022ம் கல்வியாண்டில் புதிய பாடப் பிரிவுகள் துவங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். விளையாட்டு மைதானத்தை சீரமைத்து தரவேண்டும் என, எம்.எல்.ஏ.விடம் கோரிக்கை வைக்கப்பட்டது.இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி, உரிய நடவடிக்கை எடுப்பதாக அங்காளன் எம்.எல்.ஏ., தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X