இந்தியா

வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக ரூ. 7.40 லட்சம் மோசடி

Added : ஜூலை 28, 2021
Share
Advertisement
புதுச்சேரி : சிங்கப்பூரில் வேலை வாங்கித் தருவதாக கூறி, ரூ. 7.40 லட்சம் மோசடி செய்த வாலிபரை போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.புதுச்சேரி வாழைக்குளம் நகராட்சி குடியிருப்பைச் சேர்ந்தவர் பழனிவேல், 22; சூப் கடை நடத்தி வருகிறார். அதே பகுதியை சேர்ந்தவர் சரவணன்,30; சிங்கப்பூரில் வேலை செய்து, ஊர் திரும்பியவர். இவரும், சென்னை அம்பத்துாரை சேர்ந்த திலீப், 34, என்பவரும் சேர்ந்து,

புதுச்சேரி : சிங்கப்பூரில் வேலை வாங்கித் தருவதாக கூறி, ரூ. 7.40 லட்சம் மோசடி செய்த வாலிபரை போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

புதுச்சேரி வாழைக்குளம் நகராட்சி குடியிருப்பைச் சேர்ந்தவர் பழனிவேல், 22; சூப் கடை நடத்தி வருகிறார். அதே பகுதியை சேர்ந்தவர் சரவணன்,30; சிங்கப்பூரில் வேலை செய்து, ஊர் திரும்பியவர். இவரும், சென்னை அம்பத்துாரை சேர்ந்த திலீப், 34, என்பவரும் சேர்ந்து, பழனிவேலுக்கு, சிங்கப்பூரில் வேலை வாங்கித் தருவதாக கூறினர்.விசா, விமான டிக்கெட் செலவுக்கு என கூறி, கடந்த 2018 ஜூலை முதல் 2019 ஆகஸ்ட் மாதம் வரை பழனிவேலுவிடம் ரூ. 7.40 லட்சம் வாங்கினர்.

ஆனால், சிங்கப்பூரில் வேலை வாங்கித் தராததுடன், பணத்தையும் திருப்பி தராமல் ஏமாற்றினர். பழனிவேல் கடந்த 24ம் தேதி, முத்தியால்பேட்டை போலீசில் புகார் அளித்தார்.இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன், வழக்கு பதிந்து, திலீப், சரவணனை தேடி வந்தார்.வில்லியனுார் தட்டாஞ்சாவடியில் பதுங்கியிருந்த சரவணனை நேற்று போலீசார் கைது செய்தனர். அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி, காலாப்பட்டு சிறையில் அடைத்தனர். அம்பத்துார் திலீப்பை தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X