பொது செய்தி

இந்தியா

கேட்பாரற்ற ரூ.49,000 கோடி; பார்லி.,யில் அமைச்சர் தகவல்

Updated : ஜூலை 28, 2021 | Added : ஜூலை 28, 2021 | கருத்துகள் (10)
Share
Advertisement
புதுடில்லி:“வங்கிகள் மற்றும் இன்சூரன்ஸ் நிறுவனங்களிடம் 49 ஆயிரம் கோடி ரூபாய் கோரப்படாத தொகை உள்ளது,” என, மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பகவத் காரத் கூறினார்.மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பகவத் கராட் ராஜ்யசபாவில் எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்த பதிலில் கூறியிருப்பதாவது: ரிசர்வ் வங்கியில் இருந்து பெறப்பட்ட தகவலின் படி 2020ம் ஆண்டு டிச.,31 வரை வங்கிகளிடம் கோரப்படாத தொகை
Banks, Insurance, Rajya Sabha

புதுடில்லி:“வங்கிகள் மற்றும் இன்சூரன்ஸ் நிறுவனங்களிடம் 49 ஆயிரம் கோடி ரூபாய் கோரப்படாத தொகை உள்ளது,” என, மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பகவத் காரத் கூறினார்.

மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பகவத் கராட் ராஜ்யசபாவில் எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்த பதிலில் கூறியிருப்பதாவது: ரிசர்வ் வங்கியில் இருந்து பெறப்பட்ட தகவலின் படி 2020ம் ஆண்டு டிச.,31 வரை வங்கிகளிடம் கோரப்படாத தொகை 24 ஆயிரத்து 356 கோடி ரூபாய். அதே காலத்தில் இன்சூரன்ஸ் நிறுவனங்களிடம் 24 ஆயிரத்து 586 கோடி ரூபாய் கோரப்படவில்லை.


latest tamil news



வங்கி மற்றும் இன்சூரன்ஸ் நிறுவனங்களில் 48 ஆயிரத்து 942 கோடி ரூபாய் கோரப்படாமல் உள்ளது.ரிசர்வ் வங்கி டி.இ.ஏ.எப்., எனப்படும் முதலீட்டாளர் கல்வி மற்றும் விழிப்புணர்வு நிதி என்ற திட்டத்தை 2014ல் துவக்கியுள்ளது. வங்கிகளில் கோரப்படாத தொகை, டி.இ.ஏ.எப்., நிதிக்கு மாற்றப்படுகிறது. அதேபோல் இன்சூரன்ஸ் நிறுவனங்களில் 10 ஆண்டு களுக்கு மேல் கோரப்படாத தொகை மூத்த குடிமக்கள் நல நிதிக்கு மாற்றப்படுகிறது.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Satish Chandran - chennai,இந்தியா
29-ஜூலை-202112:26:58 IST Report Abuse
Satish Chandran பெயர், ஆதார் இல்லாமல் பணம் கட்ட முடியாது அதை வைத்து உரியவர்கள், வாரிசிகளுக்கு தர வேண்டும்
Rate this:
Cancel
Muthuraj Richard - Coimbatore,இந்தியா
28-ஜூலை-202112:57:03 IST Report Abuse
Muthuraj Richard சேமிப்புக்காக என்று சொல்லி அணுகும் தரகர்கர்களை புறக்கணியுங்கள், இன்சூரன்ஸ் என்பது ஒரு அவசர தேவைக்கு கட்ட வேண்டியது முக்கியமாக எதிர்பாராத மருத்துவ செலவுகளுக்கு உதவுமாறு இருக்கவேண்டும், நீங்கள் இறந்தால் பிள்ளைகளுக்கு பெரும்தொகை கிடைக்க உதவும் டேர்ம் இன்சூரன்ஸ் நல்லது அதைவிட்டு, பிள்ளைகள் பேரில் அல்லது வளர்ச்சி நிதி இதெல்லாம் வெறும் உதவாக்கரை திட்டங்கள், பணம் சேமிக்க வேறு நல்ல திட்டங்கள் இருக்க தரகர்கள் பேச்சை கேட்டு இன்சூரன்ஸில் பணம் போடுவது பொருத்தமானதல்ல, ஆனால் நாம் போடும் பணம் நமக்கு இல்லாவிட்டாலும் அவசரத்தில் இருக்கும் சிலருக்கு உயிர்காக்க கூட உதவுகிறது என்பதை நினைவில்கொண்டு நல்ல திட்டங்களை தேர்ந்தெடுத்து பணம் கட்டுவது சிறந்தது, நினைவில் கொள்ளுங்கள் இன்சூரன்ஸ் அவசர உதவிக்கு மட்டுமே சேமிப்பு அல்ல.ஜெயஹிந்த்
Rate this:
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
28-ஜூலை-202112:20:27 IST Report Abuse
Bhaskaran P.ep. பில் இதே மாதிரி எத்தனை ஆயிரம் கோடி வச்சேருக்கீங்க
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X