பொது செய்தி

தமிழ்நாடு

செய்தி சில வரிகளில்...

Added : ஜூலை 28, 2021
Share
Advertisement
புகையிலை விற்றவர்கள் கைதுதிண்டுக்கல்: - மாவட்டத்தில் சட்டவிரோதமாக புகையிலை பொருட்களை விற்பதாக புகார்கள் எழுந்தன. எஸ்.பி., ரவளிப்பிரியா சோதனையில் ஈடுபட உத்தரவிட்டார். மாவட்டம் முழுவதும் தனிப்படையினர் சோதனையில் ஈடுபட்டனர். இதில் சட்டவிரோதமாக விற்பனையில் ஈடுபட்ட 32 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 141.5 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.கோஷ்டி

புகையிலை விற்றவர்கள் கைதுதிண்டுக்கல்: - மாவட்டத்தில் சட்டவிரோதமாக புகையிலை பொருட்களை விற்பதாக புகார்கள் எழுந்தன. எஸ்.பி., ரவளிப்பிரியா சோதனையில் ஈடுபட உத்தரவிட்டார். மாவட்டம் முழுவதும் தனிப்படையினர் சோதனையில் ஈடுபட்டனர். இதில் சட்டவிரோதமாக விற்பனையில் ஈடுபட்ட 32 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 141.5 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.கோஷ்டி மோதல்: 7 பேர் கைதுவடமதுரை: காணப்பாடி ராமநாதபுரத்தை சேர்ந்தவர் மகேஸ்வரி 32. இவரது உறவினர் பெண்ணை, கிருஷ்ணமூர்த்தி என்பவர் கேலி செய்தார். வடமதுரை போலீசில் மகேஸ்வரி புகார் செய்தார். இருதரப்பினரும் கோஷ்டிகளாக தாக்கி கொண்டனர். மூன்று டூவீலர்கள் நொறுக்கப்பட்டன. மகேஸ்வரி புகாரில் பிரபு, 16 பேர் மீதும் பதிந்து கனகராஜ் புகாரில் 8 பேர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இருதரப்பிலும் ஏழுபேர் கைது செய்யப்பட்டனர்.சேவல் வைத்து சூதாடியவர் கைதுநத்தம்: சேவல் வைத்து சூதாடுவதாக புகார்கள் வந்ததையடுத்து, மதுக்காரம்பட்டி பகுதியில் இன்ஸ்பெக்டர் சரவணன், ஏட்டு கணேஷ்குமார் ரோந்து சென்றனர். அங்குள்ள மலை அடிவாரத்தில் சேவல் வைத்து சூதாடிய நிர்மல் 19, அரவிந்த் 20, துரைப்பாண்டி 42, பாலாஜி 19, உள்பட ஐவரை கைது செய்தனர். அவர்களின் 4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.நிர்வாகிகள் தேர்வுவேடசந்துார்: தாலுகா புகைப்பட கலைஞர்கள், வீடியோ கிராபர்கள் சங்க துவக்கவிழா மற்றும் நிர்வாகிகள் தேர்வு நடந்தது. கவுரவ தலைவராக கணேசன், தலைவராக முருகேசன், துணைத் தலைவராக சுப்பையா, இணைத் தலைவராக ஷாஜி, செயலாளராக செண்பகராஜன், துணை செயலாளராக சீனிவாசன், இணை செயலாளராக பாலசுப்பிரமணியன், பொருளாளராக குட்டி தேர்வு செய்யப்பட்டனர். முறையான விலை பட்டியல் வைப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.அ.ம.மு.க., ஆலோசனை ஒட்டன்சத்திரம்: -திண்டுக்கல் மேற்கு மாவட்ட அ.ம.மு.க., சார்பில் உள்ளாட்சி தேர்தல் குறித்து ஆலோசனை கூட்டம் ஒட்டன்சத்திரத்தில் நடந்தது.மாவட்ட செயலாளர் நல்லசாமி தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர் முருகேசன், முன்னாள் நகர தலைவர் சுப்பிரமணி முன்னிலை வகித்தனர். மாவட்ட சிறுபான்மையினர் பிரிவு செயலாளர் ஜமால் தீன், முன்னாள் கவுன்சிலர் ராமமூர்த்தி, தகவல் தொழில்நுட்ப பிரிவு ராம் உள்பட பலர் பங்கேற்றனர்.கட்டட கழிவுகளால் அவதிகொடைக்கானல்: ஏரிச்சாலையில் சுற்றுலா நிதி மூலம் 5 கி.மீ., சுற்றளவுள்ள நடைமேடை சீரமைக்கும் பணி துவங்கியது. இதுவரை முழுமையடையாத நிலையில் ஏரிச்சாலையில் இடிபாடு, கட்டட கழிவுகள் ரோட்டோரம் குவிக்கப்பட்டுள்ளது.ஊரடங்கு தளர்வுக்குப் பின் சுற்றுலா பயணிகள் வருவதால், நடைப்பயிற்சி, குதிரை, சைக்கிள் சவாரி செய்வோர், இடையூறுகளால் தடுமாறுகின்றனர். தாமதமாக நடக்கும் பணியை துரிதப்படுத்தி இடையூறுகளை அகற்ற நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.ஆவணம் சரிபார்ப்புதிண்டுக்கல்: மாநகராட்சி கட்டுப்பாட்டிலுள்ள காந்தி மார்க்கெட் புதுப்பிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வராமல் உள்ளது. மார்க்கெட்டை திறக்க வியாபாரிகள், வர்த்தகர்கள் வலியுறுத்தி வருகின்றனர். கமிஷனர் சிவசுப்பிரமணியன் அறிவுரையின் படி, கடை ஒதுக்குவது தொடர்பாக, ஏற்கனவே கடை வைத்திருந்தவர்கள் முறையாக வாடகை, புதிய கடைக்கு டிபாசிட் செலுத்தியுள்ளனரா, கடை நடத்துவது யார் என்பது குறித்து ஆவணங்கள் சரிபார்ப்பு நடந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X