பொது செய்தி

தமிழ்நாடு

கவனம் செலுத்துங்க ! பயன்பாட்டிற்கு வராது முடங்கிய சுகாதாரவளாகங்கள்

Added : ஜூலை 28, 2021
Share
Advertisement
அருப்புக்கோட்டை : விருதுநகர் மாவட்டத்தில் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் கட்டப்பட்டுள்ள நவீன சுகாதார வளாகங்கள் மக்கள் பயன்பாட்டிற்கு வரமாலே சேதமடைந்து கிடக்கின்றன. இதை சீர் படுத்தாத அதிகாரிகளின் அலட்சியத்தால் திறந்த வெளி கழிப்பிடத்தை ஊக்குவிக்கும் நிலை தொடர்கிறது.மத்திய அரசின் துாய்மை இந்தியா திட்டத்தின் மூலம் நகர், கிராம பகுதிகளில் திறந்தவெளி கழிப்பிடத்தை

அருப்புக்கோட்டை : விருதுநகர் மாவட்டத்தில் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் கட்டப்பட்டுள்ள நவீன சுகாதார வளாகங்கள் மக்கள் பயன்பாட்டிற்கு வரமாலே சேதமடைந்து கிடக்கின்றன.

இதை சீர் படுத்தாத அதிகாரிகளின் அலட்சியத்தால் திறந்த வெளி கழிப்பிடத்தை ஊக்குவிக்கும் நிலை தொடர்கிறது.மத்திய அரசின் துாய்மை இந்தியா திட்டத்தின் மூலம் நகர், கிராம பகுதிகளில் திறந்தவெளி கழிப்பிடத்தை தவிர்க்க தனி நபர் கழிப்பறை ,பொது கழிப்பறைகள் அமைக்கப்பட்டது. ஆனால் இத்திட்டங்களை உள்ளாட்சி அமைப்புகள் முறையாக செயல்படுத்த வில்லை. தரமற்ற கட்டுமானம், மோசமான பராமரிப்பு காரணமாக கழிப்பறைகள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளன.

ஆண்கள் ,பெண்களுக்கான தனி கழிப்பறை , குளியல் அறைகள் கொண்ட நவீன சுகாதார வளாகமும் பல இடங்களில் கட்டப்பட்டுள்ளது. ஆனால் இதில் பெரும்பாலானவை பயன்பாட்டிற்கு வராமலே முடங்கி கிடக்கின்றன.இதை மக்கள் வசிக்கும் பகுதியில் இல்லாமல் ஊரின் எல்லைப்பகுதியில் கட்டிஉள்ளதாலும் இவற்றை மக்கள் பயன்படுத்த தயங்குகின்றனர். சுகாதார வளாகம் கட்டும் உள்ளாட்சிகள் கட்டும்போதே மக்கள் பயன்பாட்டிற்கு ஏற்றவாறு இருக்குமா என்பதை யோசிப்பதில்லை. கட்டுமானத்திலும் தரம் இல்லை. இதனால் கழிப்பறைகள் பெரும்பாலும் 'சும்மா' கிடக்கின்றன.

இதன் மூலம் அரசு நிதியும் வீணடிக்கப்பட்டுள்ளன.............இருப்பதையாவது செயல்படுத்துங்க திறந்தவெளியை கழிப்பிடமாக பயன்படுத்த கூடாது என்ற எண்ணத்தில் அரசு, தனி நபர் கழிப்பறை, பொது கழிப்பறைகளை கட்டி தருகிறது. இவற்றை முறையாக பயன்படுத்துவதற்கு ஏற்றவாறு அமைக்க வேண்டும். பயன்படாத கழிப்பறைகள்,நவீன சுகாதார மராமத்து பணி செய்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.டேனியல், சமூக ஆர்வலர் , அருப்புக்கோட்டை..................

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X