சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கொரோனா காலகட்டத்தில் 23 குழந்தை தொழிலாளர்கள் மீட்பு

Added : ஜூலை 28, 2021
Share
Advertisement
குழந்தை தொழிலாளர்களை பணியமர்த்தினால தண்டனை என்னகொரோனா நேரத்தில் குழந்தைகள் வேலைக்கு செல்ல வாய்ப்பு உள்ளதால் கடை, நிறுவன, தொழிற்சாலை உரிமையாளர்கள் 18 வயது நிரம்பாத குழந்தைகளை பணியமர்த்த கூடாது என தெரிவிக்கப்படுகிறது. ஆய்வின் போது கண்டறிந்தால் நீதிமன்றம் மூலம் குழந்தை, வளரிளம்பருவ தொழிலாளர் தடுத்தல், முறைப்படுத்துதல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். 6

குழந்தை தொழிலாளர்களை பணியமர்த்தினால தண்டனை என்னகொரோனா நேரத்தில் குழந்தைகள் வேலைக்கு செல்ல வாய்ப்பு உள்ளதால் கடை, நிறுவன, தொழிற்சாலை உரிமையாளர்கள் 18 வயது நிரம்பாத குழந்தைகளை பணியமர்த்த கூடாது என தெரிவிக்கப்படுகிறது.

ஆய்வின் போது கண்டறிந்தால் நீதிமன்றம் மூலம் குழந்தை, வளரிளம்பருவ தொழிலாளர் தடுத்தல், முறைப்படுத்துதல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். 6 முதல் 2 வருட சிறை தண்டனை, ரூ.50 ஆயிரம் வரை அபராதமும் விதிக்கப்படும்.குழந்தை தொழிலாளர்கள் பற்றிய புகார்களுக்கு...தொழிலாளர் துறை, என்.சி.எல்.பி., போலீஸ், தொழிலக பாதுகாப்பு, சுகாதாரம் உள்ளிட்ட துறைகள் இணைந்து குழந்தை தொழிலாளர் தடுக்கும் படையாக செயல்படுகிறது. புகார்களுக்கு 1098 என்ற எண்ணை அழைக்கலாம்.

மாவட்டத்தில் மீட்கப்பட்ட குழந்தை தொழிலாளர்கள்இம்மாதம் மட்டும் செய்த ஆய்வில் ஸ்ரீவில்லிபுத்துார், விருதுநகர், சிவகாசி உள்ளிட்ட பகுதிகளில் 11 வளரிளம் பருவ தொழிலாளர்கள் கண்டறியப்பட்டனர். சம்மந்தப்பட்ட 11 நிறுவனங்கள் மீது வழக்கு நடந்து வருகிறது. 2020 மார்ச் முதல் தற்போது வரை கொரோனா காலகட்டத்தில் 491 ஆலைகள், கடைகள், நிறுவனங்களில் ஆய்வு செய்ததில் 23 குழந்தை தொழிலாளர்கள் கண்டறியப்பட்டனர். சம்மந்தப்பட்ட நிறுவனங்களின் வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. 8 நிறுவனங்களிடம் ரூ.1.25 லட்சம் வரை அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

தொழிலாளர்துறையில் அமலாக்க பிரிவின் நோக்கம்தொழிலாளர் நலவாரிய சட்டங்களை நிறைவேற்றுவது, கடை, உணவு நிறுவன எடையளவு சட்டம் பின்பற்றுவதை கண்காணிப்பது, தொழிலாளர்களுக்கு முறையாக ஊதிய நெறிமுறைகள் பின்பற்றப்படுகிறதா என்பது ஆய்வு செய்வது போன்றவை முக்கிய நோக்கங்கள் ஆகும்.எடையளவு சட்டத்தில் பின்பற்றப்பட வேண்டியவைவிற்பனையாளர்கள் உரிய காலத்தில் தங்களது எடை அளவுகளை மறுபரிசீலனை செய்து முத்திரையிட்டு கொள்ள வேண்டும். எடை அளவை வாடிக்கையாளர் களுக்கு பார்க்கும் வகையிலும், முத்திரையிட்ட மறுபரிசீலனை சான்றை தராசு அருகிலும் வைத்திருக்க வேண்டும்.

பொட்டல பொருட்களில் பின்பற்றப்படும் நடைமுறைகள் பொட்டலமிட்டு தயார்நிலையில் விற்பனையில் வைக்கப்பட்ட பொருட்கள் அனைத்தும் பொட்டல பொருட்கள் ஆகும். பொட்டலத்தின் மீது பொருளின் பெயர், அதிகபட்ச சில்லரை விலை, நிகர எடை, பொட்டலமிட்டவர், உற்பத்தியாளர் பெயர், தேதி, புகார் எண் குறிப்பிட்டிருக்க வேண்டும். இதன் நடைமுறை குறித்து மீறுவோர் பற்றி புகாருக்கு 04562 - 252130ல் அழைக்கலாம்.சம ஊதிய நடைமுறை என்றால் என்னபட்டாசு, தீப்பெட்டி, அச்சகம் உள்ளிட்ட அனைத்து பணித்தளங்களிலும் ஆண், பெண் இருபாலரும் பணிபுரிகின்றனர். ஆணுக்கும், பெண்ணுக்கும் ஒரே மாதிரியான அளவில் வேலை செய்தால் சம ஊதிய சட்டத்தின் படி இருவருக்கும் ஒரே ஊதியம் கொடுக்கப்பட வேண்டும். இதை மீறினாலும் நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X