பொது செய்தி

தமிழ்நாடு

வேடசந்துார் வட்டாரத்தில் ஆசிரியர்களுக்கு பயிற்சி

Added : ஜூலை 28, 2021
Share
Advertisement
வேடசந்துார் : தமிழக அரசின் கல்வி 'டிவி'யை மாணவர்கள் கவனிப்பதை,கண்காணிக்க குழு அமைத்து செயல்படும் வகையில்ஆசிரியர்களுக்கு பயிற்சி வகுப்பு நடந்தது.கொரோனா தாக்கம் காரணமாக கடந்த ஆண்டில் இருந்தே, பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. இருந்தாலும் மாணவர்களுக்கு கல்வி 'டிவி' மூலம் பாடங்கள் கற்பிக்கப்பட்டு வருகிறது. இதை கல்வி அதிகாரிகள், ஆசிரியர்கள்

வேடசந்துார் : தமிழக அரசின் கல்வி 'டிவி'யை மாணவர்கள் கவனிப்பதை,கண்காணிக்க குழு அமைத்து செயல்படும் வகையில்ஆசிரியர்களுக்கு பயிற்சி வகுப்பு நடந்தது.கொரோனா தாக்கம் காரணமாக கடந்த ஆண்டில் இருந்தே, பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.

இருந்தாலும் மாணவர்களுக்கு கல்வி 'டிவி' மூலம் பாடங்கள் கற்பிக்கப்பட்டு வருகிறது. இதை கல்வி அதிகாரிகள், ஆசிரியர்கள் கண்காணித்துவருகின்றனர்.வேடசந்துார் கல்வி மாவட்டத்தில் பள்ளி ஆசிரியர்களை ஒருங்கிணைத்து, மாணவர்கள் 100 சதவீதம் கல்வி டிவியை கவனிக்கவும், அதை கண்காணிக்கவும் குழு அமைத்துள்ளனர். அவர்களுக்கு கல்வி அலுவலர் கீதா தலைமையில் நேற்று பயிற்சி வகுப்பு நடந்தது.மாணவர்களின் வீடுகளில் மின் இணைப்பு, டிவி வசதி உள்ளதா என ஆராய்வது, கல்வி டிவியை கட்டாயம் பார்க்க நடவடிக்கை எடுப்பது, அன்றைய பாடம் குறித்து கேட்டு தெளிவுபடுத்துவது போன்ற நடவடிக்கையில் ஈடுபட உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X