பொது செய்தி

தமிழ்நாடு

பி.எஸ்.என்.ஏ., கல்லுாரியில்ரோபோட்டிக்ஸ் ஆய்வகம்

Added : ஜூலை 28, 2021
Share
Advertisement
திண்டுக்கல் : திண்டுக்கல் பி.எஸ்.என்.ஏ., பொறியியல் கல்லுாரியில் ரோபோட்டிக்ஸ் மற்றும் ஆட்டோமேஷனில் இயங்கும் சிறப்பு மையம் துவங்கப்பட்டுள்ளது. இம்மையம் மின்னணு மற்றும் தொடர்பு பொறியியல் துறையில் புனேவின் ரோபோலேப் டெக்னாலஜிஸ் ஆதரவுடன் ரூ.35 லட்சத்தில் நிறுவப்பட்டுள்ளது. துறைத் தலைவர் அத்திஷா வரவேற்றார்.கலெக்டர் விசாகன் திறந்து வைத்து, மாணவர்கள் வடிவமைத்த ரோபோக்களை

திண்டுக்கல் : திண்டுக்கல் பி.எஸ்.என்.ஏ., பொறியியல் கல்லுாரியில் ரோபோட்டிக்ஸ் மற்றும் ஆட்டோமேஷனில் இயங்கும் சிறப்பு மையம் துவங்கப்பட்டுள்ளது.

இம்மையம் மின்னணு மற்றும் தொடர்பு பொறியியல் துறையில் புனேவின் ரோபோலேப் டெக்னாலஜிஸ் ஆதரவுடன் ரூ.35 லட்சத்தில் நிறுவப்பட்டுள்ளது. துறைத் தலைவர் அத்திஷா வரவேற்றார்.கலெக்டர் விசாகன் திறந்து வைத்து, மாணவர்கள் வடிவமைத்த ரோபோக்களை பார்வையிட்டார். முதன்மை தலைவர் ரகுராம் கூறுகையில், ''இம்மையம் மாணவர் சமூகத்திற்கு ரோபோ பயன்பாடுகளின் வடிவமைப்பில் முதல் செயல்சார் பயிற்சி அனுபவத்தை பெற உதவும்.

ரோபோட்டிக்ஸ் துறையில் மாணவர்களின் அறிவை மேம்படுத்தி சிறந்த தொழில், வேலை வாய்ப்புகளை பெற உதவும்'' என்றார். முதல்வர் வாசுதேவன், மைய பொறுப்பாளர்கள்பூமா, சரவணன் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X