பொது செய்தி

தமிழ்நாடு

அமைச்சரின் கோயில் பணிக்கு ரூ.80 லட்சம்

Added : ஜூலை 28, 2021
Share
Advertisement
விருதுநகர் : முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கோயில் பணிக்காக ஒன்றிய நிதியிலிருந்து ரூ.80 லட்சம் செலவிடப்பட்டுள்ளது போன்ற குற்றச்சாட்டுகளை அடுக்கியப்படி விருதுநகர் ஒன்றியகூட்டத்தில் கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர். இவ் ஒன்றிய கூட்டம் தலைவர் சுமதி ராஜசேகர்(அ.தி.மு.க.,) தலைமையில் நடந்தது. துணைத் தலைவர் முத்துலட்சுமி முன்னிலை வகித்தார். கூட்டம்

விருதுநகர் : முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கோயில் பணிக்காக ஒன்றிய நிதியிலிருந்து ரூ.80 லட்சம் செலவிடப்பட்டுள்ளது போன்ற குற்றச்சாட்டுகளை அடுக்கியப்படி விருதுநகர் ஒன்றியகூட்டத்தில் கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.

இவ் ஒன்றிய கூட்டம் தலைவர் சுமதி ராஜசேகர்(அ.தி.மு.க.,) தலைமையில் நடந்தது. துணைத் தலைவர் முத்துலட்சுமி முன்னிலை வகித்தார். கூட்டம் துவங்கியதும் கவுன்சிலர்கள் வெளி நடப்பு செய்த நிலையில் பெரும்பாலான கவுன்சிலர்கள் இல்லாததால் கூட்டம் முடிந்தது.இதில் வெளி நடப்பு செய்த கவுசின்லர் சங்கர் ராஜ் (தி.மு.க.,) கூறியதாவது : தேர்தலில் வெற்றி பெற்று இரண்டு ஆண்டுகள் ஆகியும் அடையாள அட்டை வழங்க இன்று வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஒன்றிய வளர்ச்சி பணிகளுக்கு தேவையான நிதி வழங்கப்படவில்லை. நிதி பற்றாக்குறை என காரணம் கூறுகின்றனர்.

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தனது அதிகாரத்தை பயன்படுத்தி ஒன்றிய நிதி ரூ.80 லட்சத்தை மூளிபட்டியில் உள்ள அவரது கோயிலுக்கு தேவையான பணிகளை செய்வதற்கு பயன்படுத்தி கொண்டார். அரசு பணத்திலே அப்பகுதியில் அவர் கட்டியது போன்று திருமண மண்டபத்தையும் கட்டி உள்ளார்,என்றார்.கவுன்சிலர் மாரியப்பன் (அ.தி.மு.க.,) கூறியதாவது: தீர்மானங்கள் சரிவர நிறைவேற்றபடுவதில்லை. செலவீன கணக்குகளும் நேர்மையாக கடைபிடிப்பதில்லை. அடையாள அட்டை வரவில்லை என கேட்டால் கலெக்டர் அலுவலகத்தில் கையெழுத்திற்காக கொடுத்திருக்கிறோம் என்கிறார்கள்.

ஒரு கையெழுத்து வாங்குவதற்கு 2 வருடமா. தி.மு.க., கவுன்சிலர்களுடன் நாங்களும் வெளிநடப்பு செய் தோம். கூட்டம் முடிந்த பின் வீடுகளுக்கு சென்று அ.தி.மு.க., கவுன்சிலர்கள் சிலரை சமாதானம் செய்து முக்கிய தீர்மானங்களை நிறைவேற்ற கையெழுத்து வாங்கி உள்ளனர். இது சட்டப்படி தவறானாது, என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X