சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பயன்படாத மேல்நிலை குடிநீர் தொட்டி சீரற்ற மின்சப்ளையால் அவதி

Added : ஜூலை 28, 2021
Share
Advertisement
தேனி : பாதாள சாக்கடை இணைப்பு வழங்கப்படாத குடியிருப்புக்கள்; கொசுக்கடியால் காய்ச்சல் பரவும் அச்சம்; பயன்பாட்டிற்கு வராத மேல்நிலைத்தொட்டியால் குடிநீர் பற்றாக்குறை; சீரற்ற மின்சப்ளையால் வீட்டில் மின்சாதனங்கள் பழுது ; 'டிரான்ஸ்பார்மர்' அமைக்க தாமதப்படுத்தும் மின்துறை என பல்வேறு குறைபாடுகளால் பழனிச்செட்டிபட்டி பேரூராட்சி ஜெய் ஆஞ்சநேயா நகர் குடியிருப்போர்

தேனி : பாதாள சாக்கடை இணைப்பு வழங்கப்படாத குடியிருப்புக்கள்; கொசுக்கடியால் காய்ச்சல் பரவும் அச்சம்; பயன்பாட்டிற்கு வராத மேல்நிலைத்தொட்டியால் குடிநீர் பற்றாக்குறை; சீரற்ற மின்சப்ளையால் வீட்டில் மின்சாதனங்கள் பழுது ; 'டிரான்ஸ்பார்மர்' அமைக்க தாமதப்படுத்தும் மின்துறை என பல்வேறு குறைபாடுகளால் பழனிச்செட்டிபட்டி பேரூராட்சி ஜெய் ஆஞ்சநேயா நகர் குடியிருப்போர் நலச்சங்கத்தினர் குமுறுகின்றனர்.

தலைவர் குபேந்திரன், செயலாளர் கார்த்திகேயன், பொருளாளர் பாலகும்பகன், ஆலோசகர் ராஜகோபால், உறுப்பினர்கள் அய்யப்பகணேஷ், கிருஷ்ணவேணி கூறியதாவது:பேரூராட்சி அமைந்துள்ள எங்கள் குடியிருப்புப்பகுதியில் ஆஞ்சநேயா நகர்மெயின் ரோடு, அதன் 1 - 5 தெருக்கள், ஜெயம் நகர் அதன் குறுக்குத்தெருக்கள் உள்ளன. இதில் 136 குடியிருப்புக்கள் உள்ளன. ரோடு வசதி, தெருவிளக்கு, பாதுகாப்பு என பேரூராட்சி பணிகள் செய்துள்ளன. எனினும் குடியிருப்புப் பகுதிக்கு லட்சுமிநகரில் அமைக்கப்பட்ட மேல்நிலைத் தொட்டி மூலம் குடிநீர் வினியோகம் செய்யும் திட்டம் பயன்பாட்டிற்கு வராததால் குடிநீர் பற்றாக்குறை நிலவுகிறது.

தெருக்களில் பாதாள சாக்கடை அமைக்க வில்லை.விரைவில் அதனைஅமைக்க பேரூராட்சி நிர்வாகம் முன் வர வேண்டும். ஜெயம் நகர் மெயின்வீதியில் மின் வினியோகத்தால் ஏற்படும் பாதிப்புக்களை தீர்க்க டிரான்ஸ்பார்மர் அமைக்கப்படும் என மின்சாரத்துறை தெரிவித்து அதற்காக பேரூராட்சி இடத்தையும் தேர்வு செய்தார்கள். ஆனால் மேல்நடவடிக்கை இல்லை. இதனால் வீடுகளில் மின்சார வினியோக அழுத்த மாறுபாடுகளால் மிக்ஸி, கிரைண்டர் உள்ளிட்ட மின் சாதனங்கள் பழுதடைவது தொடர்கிறது. டிரான்ஸ்பார்மர் அமைக்கும் பணிவிரைவில் துவங்கப்பட வேண்டும். தெருக்களில் கழிவுநீரோடை கட்டமைப்புக்களை உருவாக்க வேண்டும். அடிப்படை வசதிகளை செய்துதரவேண்டும், என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X