சம்பவம் செய்தி

தமிழ்நாடு

செம்மறி ஆடுகள் இறப்பில் மர்மம்

Added : ஜூலை 28, 2021
Share
Advertisement
கடமலைக்குண்டு : வருஷநாடு அருகே பெரிய சாந்திபுரத்தைச் சேர்ந்தவர் அம்சமணி 40; ஆடு மேய்க்கும் தொழில் செய்து வருகிறார். நேற்று முன் தினம் வழக்கம் போல் 20 செம்மறி ஆடுகளை மேய்ச்சலுக்கு விட்டு மாலை வீடு திரும்பினார். பின்னர் ஆடுகளுக்கு குடிக்க தண்ணீர் வைத்து விட்டு கொட்டத்தில் அடைத்து வைத்துள்ளார். தண்ணீர் குடித்த 14 செம்மறிஆடுகள் அடுத்தடுத்து மர்மமான முறையில் இறந்து

கடமலைக்குண்டு : வருஷநாடு அருகே பெரிய சாந்திபுரத்தைச் சேர்ந்தவர் அம்சமணி 40; ஆடு மேய்க்கும் தொழில் செய்து வருகிறார்.

நேற்று முன் தினம் வழக்கம் போல் 20 செம்மறி ஆடுகளை மேய்ச்சலுக்கு விட்டு மாலை வீடு திரும்பினார். பின்னர் ஆடுகளுக்கு குடிக்க தண்ணீர் வைத்து விட்டு கொட்டத்தில் அடைத்து வைத்துள்ளார். தண்ணீர் குடித்த 14 செம்மறிஆடுகள் அடுத்தடுத்து மர்மமான முறையில் இறந்து விட்டது. ஆறு ஆடுகள் உடல் நிலை மோசமடைந்துள்ளது. ஆடுகள் குடித்த தண்ணீரில் மர்ம நபர்கள் விஷம் கலந்து விட்டதாக வருஷநாடு போலீசில் புகார் கொடுத்துள்ளார். எஸ்.ஐ., அருண்பாண்டி விசாரிக்கிறார். கால்நடை டாக்டர் மதுசூதனன் இறந்த ஆடுகளின் உடல்களை பரிசோதனை செய்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X