சம்பவம் செய்தி

தமிழ்நாடு

போலீஸ் செய்திகள்:====  

Added : ஜூலை 28, 2021
Share
Advertisement
கற்பழிப்பு வழக்கு: ஒருவர் கைதுசிவகங்கை: இளையான்குடி அருகே பெரும்பாலையை சேர்ந்த 27 வயது பெண். மனநலம் பாதித்த இவர் வீட்டு வாசலில் துாங்குவது வழக்கம். 5 மாதத்திற்கு முன் வீட்டு வாசலில் படுத்திருந்த அப்பெண்ணை, பெண்ணின் அக்காள் கணவரின் தம்பி இண்டங்குளம் காளிதாசன் 35, கொலை மிரட்டல் விடுத்து கற்பழித்துள்ளார். பரிசோதனையில் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. விசாரணையில்

கற்பழிப்பு வழக்கு: ஒருவர் கைதுசிவகங்கை: இளையான்குடி அருகே பெரும்பாலையை சேர்ந்த 27 வயது பெண். மனநலம் பாதித்த இவர் வீட்டு வாசலில் துாங்குவது வழக்கம். 5 மாதத்திற்கு முன் வீட்டு வாசலில் படுத்திருந்த அப்பெண்ணை, பெண்ணின் அக்காள் கணவரின் தம்பி இண்டங்குளம் காளிதாசன் 35, கொலை மிரட்டல் விடுத்து கற்பழித்துள்ளார்.

பரிசோதனையில் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. விசாரணையில் காளிதாசன் கற்பழித்ததாக அப்பெண் தெரிவித்தார். சிவகங்கை இன்ஸ்பெக்டர் முத்துமீனாட்சி பெண்ணை கற்பழித்த காளிதாசனை கைது செய்தார்.மாணவர் கொலை: இருவர் கைதுசிவகங்கை: சிவகங்கையில் பிலிப்பைன்ஸ் மருத்துவ கல்லுாரி மாணவர் கிறிஸ்டோபரை கொலை செய்த வழக்கில் நேருபஜார் ராகுல்பாலாஜி 23, போலீசார் கைது செய்தனர். சிவகங்கை முத்துநகர் ஓய்வு ஆசிரியர் இருதயராஜ் 59. இவரது தோட்டத்து வீட்டில் கும்பல் மது அருந்துவதாக வந்த தகவலில், இருதயராஜ் அவரது மகன்கள் பிலிப்பைன்ஸ் மருத்துவ மாணவர்களான ஜோசப் சேவியர் 24, கிறிஸ்டோபர் 23 ஆகியோர் அலைபேசியில் போட்டோ எடுத்துள்ளனர்.இந்த ஆத்திரத்தில் கும்பல் கத்தியால் மூவர் மீதும் தாக்குதல் நடத்தியது. இதில் கிறிஸ்டோபர் பலியானார். இந்த வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைத்து எஸ்.பி.,செந்தில்குமார் உத்தரவிட்டார். தனிப்படையினர் சம்பவத்தன்றே கீழவாணியங்குடி மருதுபாண்டியன் 24, நேருபஜார் நந்தகுமார் 23, வசந்த் மூவரும் கைதான நிலையில் நேற்று ராகுல் பாலாஜி, வேம்பத்துார் சரவணன் இருவரையும் கைது செய்தனர்.வேன் மோதி முதியவர் பலிகாளையார்கோவில்: கொல்லங்குடி அருகே வீரமுத்துபட்டி சுப்பையா 60. நேற்று காலை 8:30 மணிக்கு டூவீலரில் காளையார்கோவிலுக்கு சென்றார். கொல்லங்குடி அருகே எதிரே சிவகங்கைக்கு தபால் ஏற்றி வந்த வேன் மோதி, கவிழ்ந்தது. இவ்விபத்தில் சுப்பையா பலியானார். காளையார்கோவில் இன்ஸ்பெக்டர் சரவணன், வேன் டிரைவர் செண்பகபாண்டியை கைது செய்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X