பொது செய்தி

தமிழ்நாடு

குறைப்பு

Added : ஜூலை 28, 2021
Share
Advertisement
உத்தமபாளையம் : தேனிமாவட்டத்தில் இயந்திர நெல் நடவுக்கான மானியம் வழங்க நிதி ஒதுக்கீடு பல மடங்கு குறைக்கப்பட்டுள்ளது. மாறாக அதனை இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக வேளாண்துறையினர் தெரிவித்தனர். கம்பம் பள்ளத்தாக்கில் 14 ஆயிரத்து 407 ஏக்கர் பரப்பில் இருபோக நெல் சாகுபடி மேற்கொள்ளப் படுகிறது. தொழிலாளர் பற்றாக்குறையால் இயந்திர நடவிற்கு

உத்தமபாளையம் : தேனிமாவட்டத்தில் இயந்திர நெல் நடவுக்கான மானியம் வழங்க நிதி ஒதுக்கீடு பல மடங்கு குறைக்கப்பட்டுள்ளது. மாறாக அதனை இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக வேளாண்துறையினர் தெரிவித்தனர்.

கம்பம் பள்ளத்தாக்கில் 14 ஆயிரத்து 407 ஏக்கர் பரப்பில் இருபோக நெல் சாகுபடி மேற்கொள்ளப் படுகிறது. தொழிலாளர் பற்றாக்குறையால் இயந்திர நடவிற்கு வேளாண் துறை கடந்த சில ஆண்டுகளாக விவசாயிகளை தயார்படுத்தி வருகிறது. இதில் தேவைப்படும் விதை குறைவு, நோய் தாக்காதது, அதிக மகசூல் போன்றவை சிறப்புகளாகும். மேலும் எக்டேருக்கு ரூ. 6 ஆயிரம் வரை பின்னேற்பு மானியமாகவும் வழங்கப்பட்டது. இதனால் ஆண்டிற்கு ஆண்டு விவசாயிகள் இயந்திர நடவிற்கு மாற தயாரானார்கள்.இந்த ஆண்டு கணிசமானோர் இயந்திர நெல் நடவு செய்துள்ளனர். ஆனால் அரசோ அதற்கான மானிய நிதி ஒதுக்கீடுகளை கடுமையாக குறைத்துள்ளது.

கடந்தாண்டு உத்தமபாளையம், கம்பம் மற்றும் சின்னமனுார் வட்டாரங்களுக்கு 225 எக்டேர் வரை இயந்திர நடவிற்கு நிதி ஒதுக்கீடு தரப்பட்டது. ஆனால் இந்தாண்டு உத்தமபாளையம், சின்னமனுார் வட்டாரங்களுக்கு தலா 20 எக்டேர், கம்பத்திற்கு 10 எக்டேர் உட்பட மொத்தம் தேனி மாவட்டத்திற்கு 50 எக்டேருக்கு மட்டுமே மானிய நிதி அனுமதி வழங்கப்பட்டுள்ளது. குறைக்கப்பட்ட நிதியை ரசாயன உரம், பூச்சிக்கொல்லி மருந்து இன்றி பயிர் சாகுபடி மேற்கொள்வோரின் இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக வேளாண்துறையினர் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X