பொது செய்தி

தமிழ்நாடு

அறுவை சிகிச்சை வசதியுடன் எஸ்.புதுார் அரசு மருத்துவமனை

Added : ஜூலை 28, 2021
Share
Advertisement
எஸ்.புதுார் : எஸ்.புதுார் ஒன்றியத்தில் அறுவை சிகிச்சை வசதியுடன் கூடிய அரசு மருத்துவமனை அமைக்க அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர். மலை கிராமங்கள் அதிகமுள்ள இவ்வொன்றியத்தில் 21 ஊராட்சிகள் உள்ளன. எஸ்.புதுாரில் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையமும் புழுதிபட்டியில் கூடுதல் ஆரம்ப சுகாதார நிலையமும் உள்ளன.இப்பகுதி மக்கள் பெரும்பாலும் ஆரம்ப சுகாதார நிலையங்களில்

எஸ்.புதுார் : எஸ்.புதுார் ஒன்றியத்தில் அறுவை சிகிச்சை வசதியுடன் கூடிய அரசு மருத்துவமனை அமைக்க அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

மலை கிராமங்கள் அதிகமுள்ள இவ்வொன்றியத்தில் 21 ஊராட்சிகள் உள்ளன. எஸ்.புதுாரில் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையமும் புழுதிபட்டியில் கூடுதல் ஆரம்ப சுகாதார நிலையமும் உள்ளன.இப்பகுதி மக்கள் பெரும்பாலும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் தான் சிகிச்சை மேற்கொள்கின்றனர். இங்கு சிகிச்சை அளிக்கப்பட்டாலும் அறுவை சிகிச்சை மற்றும் அவசர சிகிச்சை காலங்களில் கர்ப்பிணிகள், நோயாளிகள் சிவகங்கை, புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்கே அனுப்பப்படுகின்றனர்.

தொலைத்தொடர்பு மற்றும் போக்குவரத்து வசதி குறைவு காரணமாக தாமதம் ஏற்படும் நிலை உள்ளது. எனவே எஸ்.புதூரில் தனியாக அறுவை சிகிச்சை, ஸ்கேன், எக்ஸ்ரே உள்ளிட்ட வசதிகளுடன் கூடிய அரசு மருத்துவமனை அமைக்க அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X