சம்பவம் செய்தி

தமிழ்நாடு

புகார்

Added : ஜூலை 28, 2021
Share
Advertisement
சிவகங்கை : -சிவகங்கை மாவட்டத்தில் நுாறு நாள் வேலை திட்டத்தில் விதிமுறைகளை மீறி பணிகள் செய்யப்பட்டு வருவதாக ஊராட்சிகள் கூட்டமைப்பு சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. நுாறு நாள் வேலை திட்டத்தில் கண்மாய் வரத்துக்கால்வாய், கண்மாய் துார் வாருதல், சிறு பாலங்கள் அமைத்தல் உள்ளிட்ட பணிகள் செய்யப்பட்டு வருகின்றன. இதில் பொருட்களுக்கு 60 சதவீதமும், பணியாளர்கள் கூலியாக 40

சிவகங்கை : -சிவகங்கை மாவட்டத்தில் நுாறு நாள் வேலை திட்டத்தில் விதிமுறைகளை மீறி பணிகள் செய்யப்பட்டு வருவதாக ஊராட்சிகள் கூட்டமைப்பு சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நுாறு நாள் வேலை திட்டத்தில் கண்மாய் வரத்துக்கால்வாய், கண்மாய் துார் வாருதல், சிறு பாலங்கள் அமைத்தல் உள்ளிட்ட பணிகள் செய்யப்பட்டு வருகின்றன. இதில் பொருட்களுக்கு 60 சதவீதமும், பணியாளர்கள் கூலியாக 40 சதவீதமும் வழங்க வேண்டும். ஊரக வளர்ச்சி முகமை அதிகாரிகள்பணியாளர்களுக்கான கூலி விகிதத்தை குறைத்தும், பொருட்களுக்கான சதவீதத்தை அதிகரித்தும் பணிகளை செய்ய உத்தரவிடுகின்றனர். ஒரு கோடி ரூபாயில் பணிகள் நடந்தால் அதில் 60 லட்சம் ரூபாய் பொருட்களுக்கும், 40 லட்சம் ரூபாய் பணியாளர்கள் கூலியாகவும் வழங்க வேண்டும்.

அதிகாரிகள் குறிப்பிட்ட ஊராட்சிகளுக்கு அதிகமானஅளவில் பணி ஒதுக்கீடு வழங்குகின்றனர். இது போன்ற விதி மீறல் அதிகளவில்நடந்து வருகிறது.வெங்கடேசன், ஊராட்சிகள் கூட்டமைப்பின் சட்ட ஆலோசகர் தெரிவித்ததாவது: ஊராட்சிகளில் நுாறு நாள் வேலை திட்டத்தில் 60 சதவீதம் பொருட்களுக்கும், 40 சதவீதம் பணியாளர்கள் கூலிக்காக ஒதுக்கீடு செய்ய வேண்டும். இந்த விதிகளை மீறி அதிகாரிகள் செயல்படுகின்றனர். இது குறித்து பலமுறை அதிகாரிகளிடம் தெரிவித்தும்நடவடிக்கை இல்லாமல் தொடர்ந்து வருகிறது. விதி மீறல் செய்யும் அதிகாரிகள்மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகம் முன் வர வேண்டும்,

என்றார்.வீரபத்திரன்,திட்ட இயக்குநர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை: இது வரை விதி மீறல் நடக்கவில்லை. 60:40 விகிதப்படி தான் நுாறு நாள் பணிகள்செய்யப்பட்டு வருகிறது. யாரும் புகார் தெரிவிக்கவில்லை. குறிப்பிட்டு சொன்னால் நடவடிக்கைஎடுக்கப்படும், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X