சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சாலை வரி கட்ட முடியாமல்வாகன உரிமையாளர்கள் தவிப்பு

Added : ஜூலை 28, 2021
Share
Advertisement
சிவகங்கை : அபராதத்துடன் சாலை வரி கட்ட முடியாமல் வாடகை வாகன உரிமையாளர்கள் தவித்து வருகின்றனர். டிச., வரை அவகாசம் வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். கொரோனா பரவல் காரணமாக தொடர்ந்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் வாடகை வாகனங்கள் தொழில் வாய்ப்பின்றி முடங்கின. வாகன உரிமம் புதுப்பிப்பு, வாகன அனுமதி போன்ற கட்டணங்கள் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் வருகிறது.மத்திய அரசு

சிவகங்கை : அபராதத்துடன் சாலை வரி கட்ட முடியாமல் வாடகை வாகன உரிமையாளர்கள் தவித்து வருகின்றனர். டிச., வரை அவகாசம் வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

கொரோனா பரவல் காரணமாக தொடர்ந்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் வாடகை வாகனங்கள் தொழில் வாய்ப்பின்றி முடங்கின. வாகன உரிமம் புதுப்பிப்பு, வாகன அனுமதி போன்ற கட்டணங்கள் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் வருகிறது.மத்திய அரசு செப்., வரை அவகாசம் வழங்கியுள்ளது. வாகனத்திற்கான சாலை வரி மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. 2020 மார்ச் முதல் சாலை வரி செலுத்தாத நிலையில் கொரோனாவுக்கான அவகாசம் 2021 ஜூனில் நிறைவு பெற்றது. ஜூலை முதல் சாலை வரியினை செலுத்த அரசு உத்தரவிட்டுள்ளது.

கொரோனா ஊரடங்கு காரணமாக தொழில் வாய்ப்பின்றி முடங்கியுள்ள வாடகை வாகன உரிமையாளர்கள்சாலை வரி கட்ட முடியாத நிலையில் உள்ளனர்.இந் நிலையில் சாலை வரி செலுத்தாத காலகட்டத்திற்கு அபராதம் விதிக்கப்படுகிறது. சாலை வரி அபராதத்துடன் இரு மடங்காகியுள்ளது. சாலை வரியை செலுத்துவதற்கு 2021 டிச., வரை அவகாசம் வழங்க வேண்டும், என வாடகை வாகன ஓட்டுநர்கள் தரப்பில் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X