பொது செய்தி

தமிழ்நாடு

நகராட்சியில் ஆக்கிரமிப்பை அகற்றுவதில் நீதிமன்ற உத்தரவிற்காக காத்திருக்கக்கூடாது

Added : ஜூலை 28, 2021
Share
Advertisement
மதுரை : ஆக்கிரமிப்புகளை அகற்றுவது நகராட்சி கமிஷனரின் சட்டப்பூர்வ கடமை. இதில் நீதிமன்ற உத்தரவிற்காக காத்திருக்கக்கூடாது. சங்கரன்கோவில் நகராட்சி பகுதி முழுவதும் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது. சங்கரன்கோவில் ரயில்வே பீடர் ரோடு வழக்கறிஞர் வீரபுத்திரன் தாக்கல் செய்த பொதுநல மனுவில் ,ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி சங்கரன்கோவில்

மதுரை : ஆக்கிரமிப்புகளை அகற்றுவது நகராட்சி கமிஷனரின் சட்டப்பூர்வ கடமை. இதில் நீதிமன்ற உத்தரவிற்காக காத்திருக்கக்கூடாது. சங்கரன்கோவில் நகராட்சி பகுதி முழுவதும் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.

சங்கரன்கோவில் ரயில்வே பீடர் ரோடு வழக்கறிஞர் வீரபுத்திரன் தாக்கல் செய்த பொதுநல மனுவில் ,ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி சங்கரன்கோவில் நகராட்சி கமிஷனருக்கு மனு அனுப்பினேன். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என குறிப்பிட்டார்.நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், எஸ்.ஆனந்தி அமர்வு: ஆக்கிரமிப்புகளை அகற்றுவது நகராட்சி கமிஷனரின் சட்டப்பூர்வ கடமை. அதை சரியாக நிறைவேற்ற வேண்டும். இதில் நீதிமன்ற உத்தரவிற்காக காத்திருக்கக்கூடாது.ரயில்வே பீடர் ரோடு மட்டுமன்றி சங்கரன்கோவில் நகராட்சிக்குட்பட்ட பகுதி முழுவதும் ஆக்கிரமிப்புகளை அகற்ற கமிஷனர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X