பொது செய்தி

தமிழ்நாடு

ஆக. 2 முதல் வாட்ஸ் ஆப் வழியே யூனிட் தேர்வுகள்

Added : ஜூலை 28, 2021
Share
Advertisement
மதுரை, : மதுரையில் அனைத்து பள்ளிகளிலும் பத்து மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு வாட்ஸ் ஆப் மூலம் யூனிட் தேர்வுகள் நடத்த கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. கொரோனா தொற்றால் பள்ளிகள் திறக்கப்படவில்லை. இருப்பினும் பொதுத் தேர்வை எழுதவுள்ள பத்து மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றி யூனிட் தேர்வுகள் நடத்தப்படவுள்ளன. இதன்படி மாணவர் மற்றும் மாணவிகளுக்கு

மதுரை, : மதுரையில் அனைத்து பள்ளிகளிலும் பத்து மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு வாட்ஸ் ஆப் மூலம் யூனிட் தேர்வுகள் நடத்த கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

கொரோனா தொற்றால் பள்ளிகள் திறக்கப்படவில்லை. இருப்பினும் பொதுத் தேர்வை எழுதவுள்ள பத்து மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றி யூனிட் தேர்வுகள் நடத்தப்படவுள்ளன. இதன்படி மாணவர் மற்றும் மாணவிகளுக்கு வகுப்பு வாரியாக வாட்ஸ் ஆப் குழுக்கள் ஆசிரியர்களால் உருவாக்கப்பட்டு ஆக.,2 முதல் 9 வரை தேர்வுகள் நடக்க உள்ளன. ஆசிரியர்கள் மூலம் மொத்தம் 50 மதிப்பெண்ணிற்கான வினாத்தாள்கள், வாட்ஸ்ஆப் மூலம் மாணவர்களுக்கு அனுப்பப்படும்.

அதை பதிவிறக்கம் செய்து தேர்வு எழுதி, விடைத்தாள்களை பெற்றோர்கள் மூலம் பள்ளிகளில் ஒப்படைக்க வேண்டும். ஜூன், ஜூலையில் கல்வி தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட பாடப் பகுதிகளில் இருந்து வினாக்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X